பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

24 புவிரசாயனவியல் வாயுமண்டலம், தட்பவெப்பநிலை. புலிக்கவர்ச்சி, நிலநடுக்கம், எரிமலை முதலியவற்றல் புலியின் மேற்பரப்பு எப்பொழுதும் மாறிக்கொண்டே இருக் கிறது. இம்மாறுதல்களை ஆராய்ந்து புவியியல் அறிஞர்கள் பல உண்மைகளைத் தெரிவிக்கிறார்கள். புலியின் வரலாற்றை அறிவதற்குப் பெரிதும் உதவுவது பாறைகளே. புவியின் மேற்பகுதியாகிய புறணி (Crust) பல. வகைப் பாறைகளால் ஆனது. இவை அக்கினிப் பாறைகள், படிவுப் பாறைகள், உருமாற்றப் பாறைகள் எனப் பல வகைப் படும். சில பகுதிகளில் இவை தோன்றிய காலமுறைப்படியே அடுக்கடுக்காக அமைந் துள்ளன. இப்பாறைகளில் படிந்துள்ள பாசில்களிலிருந்து, பல்வேறு யுகங்களில் வாழ்ந்த உயிரினங்கள் பற்றி அறிகிறோம். இன்று புவியியல் விஞ்ஞானம் பெரிதும் வளர்ச்சியடைந்துள்ளது. ஆகவே இதைப் பகுதிகளாகப் பிரித்து ஆராய்ந்து வருகிருர்கள். பல கட்டடங்கள் சிலவகைப் பாறைகள் கட்டவும், சிற்பங்கள் செதுக்கவும் பயன் படுகின்றன. பூமியிலிருந்து கிடைக்கும் தங்கம் முதலிய உலோகங்களும், நவமணி களும், நிலக்கரி, பெட்ரோலியம் முதலிய வையும் நமக்குப் பயன்படுகின்றன. புவிபெளதிகவியல், புவிரசாயனவியல், ரசாயனம், விலங்கியல், தாவரவியல் முதலிய பல அறிவியல் துறைகள் புவியிய லுடன் நெருங்கிய தொடர்புள்ளவை. புவியின் தோற்றம் பற்றி விஞ்ஞானி கள் இன்றும் ஆராய்ந்து வருகிறர்கள். புவியின் தொன்மையைக் குறிப்பிடுகையில் அது தோன்றிச் சுமார் 400 கோடி ஆண்டு. களாகிறது என்று சொல்கிறார்கள். புவிரசாயனவியல் (Geochemistry): தாம் வாழும் பூமியைப் பற்றிய விஞ் ஞானத் துறை புவியியல் (Geology ) ஆகும். இதில் பல உள்பிரிவுகள் உண்டு. அவற்றுள் ஒன்று புவிரசாயனவியல். பூமியிலுள்ள தனிமங்கள் (த.க.) என்னென்ன அளவிலும் விகிதத்திலும் உள்ளன என்பதையும், அவை இடம் பெயர்வதையும் புவிரசாயனவியல் முக்கிய மாக ஆராய்கிறது. நவீன முறைகளில் உலோகங்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கு இத்துறை பெரிதும் உதவுகிறது. பாறை களிலும் தாதுக்களிலும் உள்ள தனிமங் கள், அவை பரவியிருக்கும் வகைகள்; பூமி வின் மேற்பரப்பில், நிலத்திலும் கடலிலும் மற்றும் வாயுமண்டலத்திலும் முன்பே ஏற்பட்ட மாறுதல்கள், தொடர்ந்து ஏற்பட்டுவரும் மாறுதல்கள்; பாறைகளில் -புழு உண்டாகும் உருமாற்றங்கள்; தாவரங்கள் விலங்குகள் ஆகியவை மட்கி மாறுதலடை யும் விதங்கள் இவற்றைப் பற்றியெல் லாம் புவிரசாயனவியல் ஆராய்கிறது. புழு: மழைக்காலத்தில் தோட்டத் தில் மண்புழு (த.க.) ஊர்ந்து செல்வதைப் பார்த்திருப்பீர்கள். புழுக்களில் ஆயிரக் கணக்கான இனங்கள் உண்டு. சில -மண்ணில் வாழ்கின்றன; சில நீரில் வாழ் கின்றன; மற்றும் சில, விலங்குகளின் உடலினுள் வாழ்கின்றன; மனித உடலி னுள்ளும் புழுக்கள் வாழ்கின்றன. சில புழுக்கள் மிகச் சிறியவை: சிறிய உருவங்களைப் பெரிதாக்கிக் காட்டும் மைக் ராஸ்கோப் (த.க.) கருவிமூலமே இவற் றைப் பார்க்கமுடியும். சில புழுக்கள் மிக நீளமானவை; 12 மீட்டர் நீனமுள்ள புழுக்களும் உண்டு. புழுக்களில் பெரும் பாலானவை ஒட்டுண்ணிகளாகும் (த.க.). வாழ் இவை பிற உயிர்களைப் பற்றி கின்றன. புழுக்களை மூன்று வகையாகப் பிரிக்க லாம். 1. தட்டைப் புழுக்கள் : இவை நீள மாகவும் தட்டையாகவும் உடலுக்கு உள்ளே இடைவெளியின்றிக் கெட்டியாக வும் இருக்கும். மனித உடலினுள்ளும் விலங்குகளின் உடலினுள்ளும் இவை வாழ் கின்றன. நாடாப் புழுக்கள் (Tape worms ) இவ்வகையைச் சேர்ந்தவை. இவற்றுக்கு வாயோ மற்ற சீரண உறுப்புகளோ இல்லை. இவை தம் உடலின் மேற்பரப்பாலேயே உணவை உறிஞ்சி வாழ்கின்றன. 2. உருண்டைப் புழுக்கள் : இவை மெல் வியதாகவும் உருளையாகவும் உள்ளன. மனித உடலிலும் விலங்குகளின் உடலி புகையிலையைத் தின்னும் புழு