பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

34. பூண்டு பூமி தரைக்குமேல் குறுகலானதும் தட்டை யானதுமான இலைகள் வளரும். இலை களின் நுனியில் வெள்ளை நிறத்தில் சிறிய பூக்கள் உண்டாகும். பயிர் முதிர்ச்சி யடையும்போது, இலை பழுத்து மஞ்சளா கும். முதிர்ந்த பூண்டு தரைக்குமேல் சற்று எழும்பும். அப்போது செடியைப் பிடுங்கிப் பூண்டைத் தனியாக எடுப்பார்கள். இப் பூண்டின்மேல் வெண்ணிறமான மெல்லிய சருகுபோன்ற தோலுறை போர்த்தியிருக் கும். நுரையீரல், மூச்சுக்குழாய், தொண்டை ஆகியவற்றைப் பற்றிய நோய்களைக் குணப்படுத்தும் மருந்துகளில் வெள்ளைப் பூண்டைச் சேர்க்கிறர்கள். சுக்குவானுக்கு இது நல்லது. முன்குடல் புண்ணுக்கும், வயிற்றுப்பொருமல், குன்மம் ஆகியவற்றுக் கும் பூண்டு மருந்தாகப் பயன்படுகிறது. பூமி (Earth): நாம் வாழும் பூமி சூரியனைச் சுற்றிவருகிறது. வானவெளியில் சூரியனைச் சுற்றிவரும் ஒன்பது கிரகங் களுள் பூமி ஒன்றாகும். ஆகவே இது சூரிய மண்டலத்தைச் (த.க.) சேர்ந்தது என்று சொல்கிறோம். பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவு பதினைந்து கோடி கிலோமீட்டர். சுமார் பூமி கோள வடிவமானது என்பதை நாம் அறிவோம். பூமியின் வட துருவத் திற்கும், தென் துருவத்திற்கும் மத்தியி லுள்ள கற்பனைக்கோடு பூமத்தியரேகை எனப்படும். பூமியின் சுழற்சியினால் பூமத்திய ரேகையைச் சுற்றி பூமி சிறிது பருத்திருக்கிறது. பூமியின் துருவப்பகுதி கள் சிறிது தட்டையாக இருக்கின்றன. பூமத்திய ரேகைப் பகுதியின் விட்டம் 12,680 கிலோமீட்டர் . துருவங்க ளிடையே இதன் விட்டம் 12, 640 கிலோ மீட்டர். ம் பூமி தன் அச்சில் சுழன்றுகொண்டே இருக்கிறது அதனால்தான் இரவும் பகலும் மாறிமாறி வருகின்றன. பூமி ஒரு முறை சுழல்வதற்கு 23 மணி 56 நிமிடங் கள் ஆகின்றன. பூமி சுழல்வதோடு சூரியனை யும் சுற்றி வருகிறது. பூமி ஒரு முறை சூரியனைச் சுற்றிவர ஓராண்டு -அதாவது 365 நாள், 5 மணி, 48 நிமிடம், 46 விநாடி ஆகிறது. சாய்வாக பூமி பம்பரம்போன்று நேர்குத்தாகச் சுழல்வதில்லை. அதனுடைய அச்சு செங் குத்துக் கோட்டிற்கு 23° உள்ளது. இச்சாய்வினால்தான் உலகில் பருவங்கள் (த.க.) மாறிமாறி உண்டா கின் றன. பூமியின் மேற்பரப்பில் சுமார் 70% நீர்; 30% நிலம். ஆசியர், ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அன் அமெரிக்கா. டார்க்டிகா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா ஆகிய ஏழு கண்டங்கள் நிலப்பரப்பில் அடங்கும். நிலப்பரப்பின் பெரும்பகுதி பூமத்தியரேசைக்கு வடக்கே, அதாவது பூமியின் வட அரைக்கோளத்தில் உள்ளது. வான பூமியைச் சுற்றிச் சுமார் 960 கிலோ மீட்டர் உயரம்வரை வாயுமண்டலம் (த.க.) உள்ளது. இது ஒரு போர்வை போன்று பயன்படுகிறது. சூரியனிட மிருந்து பூமியை நோக்கி வரும் வெப்பம் மிகுந்த கதிர்ப்பும் (Radiation), வெளியிலிருந்து பூமியை நோக்கி எரிந்து கொண்டே விழும் எரிநட்சத்திரங்களும் (Meteors) நம்மைத் தாக்காமல் இந்த வாயுமண்டலம் பாதுகாக்கிறது. பூமியி லுள்ள உயிரினங்களும் தாவரங்களும் சுவாசித்து உயிர்வாழவும் உதவுகிறது. தென் துருவம் வட துருவம் 12,640 கி.மீ. s 12,680 கி.மீ. பூமியின் சுழற்சியினால் பூமத்திய ரேகையைச் சுற்றி பூமி சிறிது பருத்திருக்கிறது. பூமியின் துருவப் பகுதிகள் சிறிது தட்டையாக உள்ளன.