பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

52 பொம்மலாட்டம் - பொம்மை தமிழ்தாட்டில் தஞ்சை மாவட்டத்தில் இக்கலை தழைத்து வந்திருக்கிறது. அறிச் சந்திரன் நாடகத்தையும், இராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்களையும் பொம்மலாட்டக் குழுவினர் நாடகமாகக் காட்டுவார்கள். வட இந்தியாவில் நடத்தப் படும் பொம்மலாட்டத்தில் வரலாற்று பொம்மைகளும்... ...அவற்றை ஆட்டுவிப்போரும் நிகழ்ச்சிகளும் இடம்பெறும். மேலை நாடு களில் பொம்மலாட்டத்திற்கென்றே சிறந்த முறையில் நகைச்சுவை நாடகங்களை எழுதித் தயாரித்துள்ளளர். எந்திரங்களைப் பயன்படுத்தியும் பொம்மலாட்டக் கலையை மேலை நாட்டினர் பலவகைகளில் வளர்த் துள்ளனர். கையினால் அல்லது விரல்களால் ஆட்டி வைக்கும் பொம்மைகளும், நீண்ட குச்சி களால் ஆட்டிவைக்கும் பொம்மைகளும் உள்ளன. மேடைகளில் உயரத்திலிருந்து தொங்கும் மெல்லிய கயிறுகளாலும் உலோகக் கம்பிகளாலும் பொம்மைகளை ஆட்டிவைப்பதுண்டு. நிழலாட்டம் என்ற மற்றெரு வகைப் பொம்மலாட்டமும் உண்டு. சிறு தோல் பொம்மைகளையோ, காகித அட்டையால் செய்த பொம்மைகளையோ ஒரு விளக்குக் கும் ஒரு வெள்ளைத் திரைக்கும் நடுவே வைத்து ஆட்டி, அவற்றின் நிழல் திரையில் விழுமாறு செய்கிறார்கள். ஆந்திரத்திலும், கேரளத்திலும் இவ்வகைப் பொம்மலாட் டம் நடைபெறுகிறது. இனிய பின்னணி இசையுடன் ஆடல்களும், உரையாடல் களும் உண்டு இந்தியாவில் தோன்றிய இந்த நிழலாட்டம் ஜாவா, இந்தோனீ சியா முதலிய இடங்களுக்கும் பரவி யுள்ளது. பொம்மை: பொம்மைகளை வைத்து வினையாடுவதென்றால் குழந்தைகளுக்கு மிகுந்த விருப்பம், பண்டைக்கால முதலே உலகிலுள்ள பல்வேறு நாடுகளிலும் பொம்மை செய்யும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது. எகிப்தில் கல்லறைகளி லிருந்தும், மறைந்துபோன பாபிலோனியா நகரின் சிதைவுகளிலிருந்தும் பொம்மை கள் தோண்டி எடுக்கப்பட்டிருக்கின்றன. வட இந்தியாவில் நாகரிகத்தைக் காட்டும் ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆகிய இடங்களிலிருந்து அகழ்வாராய்ச்சியின்போது பல களிமண் பொம்மைகள் கிடைத்துள்ளன. சிந்து வெளி இந்தியாவில் பொம்மை செய்யும் கலை சிறப்புற்று விளங்குகிறது. பிற நாட்டினர் இக்கலைத்திறனைப் புகழ்ந்து பாராட்டி வருகின்றனர். இலக்கியக் காட்சிகளைச் சித்தரிக்கும் அழகிய பொம்மைகளைச் செய் வதில் இந்தியர்கள் கைதேர்ந்தவர்கள். ஒலியுண்டாக்கும் பிளாஸ்ட்டிக் பொம்மை களையும், பஞ்க. வெட்டுத் துணி, காகிதக் கூழ் முதலியவற்றைக் கொண்டு நாய், பூனை போன்ற பொம்மைகளையும் தயாரிக் கிறார்கள். தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மை மிகவும் புகழ்பெற்றது. இதன் அடிப்பகுதி களிமண்ணாலும், மேற்பகுதி காகிதத் தாலும் ஆனது. எப்படிச் சாய்த்து வைத் தாலும் இது இப்படியும் அப்படியும் சாய்ந்து தலையை ஆட்டி ஆட்டிக் கடைசி யில் நேராகவே நிற்கும். புதுச்சேரியும். தமிழ்நாட்டில் தென் ஆர்க்காடு மாவட் டத்தைச் சேர்ந்த பண்ணுருட்டியும் மண்