பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

54 பொருட்காட்சிசாலை பொருட்காட்சி சாலை (Museum) : பொருட்காட்சிசாலைக்கு நீங்கன் நீங்கள் சென் றிருப்பீர்கள். ஆதியில் 'வாழ்ந்த விலங்கு களின் எறும்புக்கூடுகள், பறவைகளின் மாதிரிகள், பாசில்கள் (த.க.). பண்டைக் காலச் சிலைகள், சிற்பங்கள், ஓவியங்கள், பழங்கால மக்கள் பயன்படுத்திய போர்க் கருவிகள், அணிகலன்கள், நாணயங்கள் இவற்றையெல்லாம் பொருட்காட்சிசாலை யில் பார்க்கலாம். மக்களின் அறிவு வளர்ச் சிக்கும் மகிழ்ச்சிக்கும் உதவும் பொருட்டு கலைப்பொருள்களையும், அறிவியல் துறை களை விளக்கும் பொருள்களையும் பிரித்து வகைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள இடமே பொருட்காட்சிசாலையாகும். பொருட் காட்சிசாலைகளில் ஓவியங்களுக்கென்று தனிப் பகுதியும் உண்டு. கி.மு. 294-ல் எகிப்து நாட்டில் அலெக் சாந்திரியாவில் நிறுவப்பட்ட நிறுவப்பட்ட பொருட் காட்சிசாலை புகழ்பெற்று விளங்கியது. ஆனால், அது அறிஞர்களுக்கு மட்டுமே பயன்பட்டது. 16ஆம் தூற்றண்டின் மத்தியில் இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் அரசர்களும், செல்வர் களும் கலைப்பொருள்களையும், சிறந்த நூல் களையும் சேகரித்துத் தமது உடைமை யாக்கி வந்தனர். 1681-ல் பிரான்ஸ் நாட் டில் பாரிஸில் அமைந்த பொருட்காட்சி சாகியதான் முதன்முதல் மக்களுக்குப் பயன் படும் வகையில் உருவானது. உலகில் சிறந்த பிரிட்டிஷ் பொருட் காட்சிசாலை 1753-ல் தொடங்கியது, எகிப்தில் நெப்போலியனுடைய படைகள் கைப்பற்றிய பண்டைச் சின்னங்களும், எல்ஜின் பிரபு (Lord Elgin) கொண்டுவந்த கிரேக்கச் சிற்பங்களும், 70,000 நூல்கள் அடங்கிய நூலகமும் இதன் வசம் வந்தன. இந்தியாவில் 1796-ல் கல்கத்தாலிலும், 1851-ல் சென்னையிலும் பொருட்காட்சி சாலைகள் அமைந்தன. இன்று உலகிலுள்ள முக்கிய நகரங்கள் பலவற்றில் பொருட்காட்சிசாலைகள் உள்ளன. பண்டைக்கால மக்களின் பண் பாட்டை விளக்கும் பொருள்கள், தொல் பொருளியல் சின்னங்கள், பண்டைக் காலச் சிறுவர்கலின் விளையாட்டுக் கருவி கள் முதலிய பல பொருள்கள் இங்குப் பார்வைக்கு வைக்கப்படுகின்றன. அறிவியல்துறைப் பிரிவில் பண்டைக் காலத்தில் வாழ்ந்த விலங்குகளின் எலும்புக்கூடுகள், பாசில்கள் உள்ளன தாவரங்களும், உயிரினங்களும் காலப் போக்கில் எவ்வாறு மாறியுள்ளன என்பதை இவை தெளிவுபடுத்துகின்றன. சிறிய நகரங்களில் தல வரலாற்றை விளக்கும் வகையில் பொருட்காட்சிசாலை - பொருளாதாரம் கள் உள்ளன. அவ்விடங்களில் அல்லது அவற்றின் சுற்றுப்புறங்களில் கிடைத்த நாணயங்கள், மண்பாண்டங்கள், சிற்பங் கள், பண்டைக்கால வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஓவியங்கள் முதலியன அவற் றில் இடம் பெறுகின்றன. பொருட்காட்சிசாலைகள் பலவகைகளில் அமையலாம். இவை நாடு முழுவதற்கும் பொதுவானவை, நகராண்மைக் கழகங் கன் நடத்துபவை, பல்கலைக்கழகங்கள். கல்லூரிகள், பள்ளிகள் நடத்துபவை, தனியார் பொறுப்பில் உள்ளவை, வாணி கத்துறையினர் கைத்தொழில்களை விளக் காட்டுபவை எனப் பலவோக கிக் இருக்கும். எதையும் நேரில் பார்த்து அறிவது, மனத்தில் நன்கு பதியும். பொருட்காட்சி சாலை இதற்குப் பெரிதும் உதவுகிறது. பொருளாதாரம் (Economics): தாம் உயிர்வாழ உணவு தேவை. உடுக்க உடையும், இருக்க வீடும் இன்றியமை யாதவை. இவை மனிதனின் அடிப்படை யான தேவைகள். இத் தேவைகளை நிறை வேற்றிக்கொள்ளப் பொருள் வேண்டும். பொருளைத் தேடும் முயற்சி பற்றியதே பொருளாதாரம் ஆகும். ஆதிகாலத்தில் மனிதனுடைய தேவை கள் மிகக் குறைவு. தன்னுடைய தேவை களைத் தானே நிறைவேற்றிக்கொள்ளவும் அன்று அவனால் முடிந்தது. வேட்டை யாடிய விலங்குகளின் இறைச்சியும், கனி கிழங்குகளுமே அவனுக்கு உணவு: விலங்குகளின் கோல்தான் அவனுக்கு ஆடை; குகைகளே வீடு. ஆனால் இன்று நிலைமை அப்படி இல்லை, மனிதன் படிப் படியாக நாகரிகமடைந்து முன்னேறிய போது அவனுடைய தேவைகளும் பெருகின. இன்று நம் தேவைகளை தாமாகவே நிறைவேற்றிக்கொள்ள முடியாது. முடியாது. நமக் குத் தேவையான உடைகளை நாமே தயாரித்துக்கொள்ள முடியுமா? முடியாது. உடைகளுக்கு அடிப்படையான பருத் நியை உழவர்கன் பயிர்செய்து விளைவிக் கின்றனர். பருத்தியிலிருந்து எடுத்த பஞ்சைப் பஞ்சாலைகளில் நூலாக நூற் கிறார்கள்; இந்நூலை நெசவாலைகளில் துணி யாக நெய்கிருர்கள். விற்பனையாளர்கள் வகைவகையான துணிகளை வாங்கி நமக்கு விற்கிறார்கள். நாம் வாங்கும் துணியைத் தையற்காரர் உடையாகத் தைத்துக் கொடுக்கிறர். இவ்விதம் ஒவ்வொருவரும் ஒரு காரியத்தைச் செய்வது வேலைப் பங்கீடு (Division of Labour) எனப்படும்.