பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

போஸ் - பௌத்த மதம் போலோ. அவருடைய செல்வாக்கைப் பெற்று அவருக்குப் பணிபுரியத் தொடங் கினார். சீன மொழியைக் கற்றுத் தேர்ந் தார். ஜப்பான், பர்மா முதலிய நாடு களுக்குச் சென்றுவந்தார். 17 ஆண்டுகள் பணி புரிந்தபின் 1292-ல் மன்னரிடம் விடை பெற்றுக்கொண்டு கடல்வழியாக இத்தாலிக்குத் திரும்பினார். சுமத்திரா, தென் இந்தியா, இலங்கை, பாரசீகம் முதலிய நாடுகள் வழியாக 1295-ல் தாய்நாட்டை அடைந்தார். மூன்றாண்டுகள் சென்றதும் வெனிஸ் நகரத்தினருக்கும் ஜெனோவா நகரத்தின ருக்கும் ஒரு பெரிய கடற்போர் மூண்டது. அதில் பங்குபெற்ற இவர் கைது செய்யப் பட்டு ஜெனோவா சிறையில் அடைக்கப் பட்டார். சிறையில் இவர் 'மார்க்கோ போலோவின் பயணங்கள்' என்ற நூலை எழுதினார். சீனப் பேரரசைப் பற்றியும், பிற கிழக்குநாடுகளைப் பற்றியும் பல விவரங்களை முதன் முதலில் உலகுக்குத் தெரிவித்தவர் மார்க்கோ போலோ போஸ், சர் ஜகதீச சந்திர (1858- 1937): நகரக்கூடிய அல்லது அசையக் கூடிய விலங்குகளே உயிருள்ளவை என்றும், ஓளிடத்திலிருந்து மற்றோரிடத் திற்கு இடம் பெயர முடியாத மரம், செடி. கொடி முதலிய தாவரங்கள் உயிரில்லாதவை என்றும் ஒரு காலத்தில் கருதிவந்தனர். இது தவறான கருத்து. தாவரங்களுக்கும் உயிரும் உணர்ச்சியும் உண்டு. இந்த உண்மையைக் கண்டு பிடித் தவர் இந்திய விஞ்ஞானி சர் ஜகதீச சந்திர போஸ். இப்போது வங்காள தேசத்தின் தலை நகராக உள்ள டாக்காவுக்கு அருகில் ராரிக்கல் என்னும் கிராமத்தில் போஸ் பிறந்தார். கல்கத்தாவிலுள்ள புனித சேவியர் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றார். பின்னர் இங்கிலாந்து சென்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்து இயற்கை விஞ்ஞானத்தில் பட்டம் பெற் றார். லண்டன் பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் அளித்தது. இந்தியா திரும்பியதும் 1885-ல் கல்கத்தா மாகாணக் கல்லூரியில் போஸ் பௌதிகவியல் பேராசிரியரானார். விஞ்ஞான உண்மைகளை ஆய்ந்து கண்டறி வதையே இவர் தமது வாழ்க்கையின் குறிக் கோளாகக் கொண்டார். இவர் முதலில் மின்சாரக் கதிர்ப்பு (Electric radiation) பற்றி ஆராய்ச்சிகள் நடத்தினார். இந்தியாவில் ஆராய்ச்சிக் கூடமொன்று நிறுவுவதற்கு போஸ் முயன்றார். அதற் காக இவர் சிக்கன வாழ்க்கை நடத்திப் 67 சர் ஜகதீச சந்திர போஸ் பொருள் சேர்த்தார். ஆனால் 25 ஆண்டு கள் சென்ற பின்னரே இம்முயற்சி வெற்றி யடைந்தது. 1915-ல் போஸ் ஓய்வுபெற் றார். இந்திய அரசாங்கம் அளித்த பொரு ளுதவியைக் கொண்டு கல்கத்தாவில் 1917 நவம்பரில் 'போஸ் ஆராய்ச்சிக் கழகம்' நிறுவப்பெற்றது. அதன் தலைவராக போஸ் பணியாற்றினார். அதே ஆண்டில் இவருக்கு சர் பட்டம் வழங்கப்பட்டது. தாவரங்களின் வளர்ச்சி பற்றி போஸ் நடத்திய ஆராய்ச்சிகள் புகழ் பெற்றவை. தாவரங்களுக்கும் உணர்ச்சி உண்டு என்றும், நச்சுப் பொருள்களை உட்கொண் டால் தாவரங்களும் துன்பப்படுகின்றன என்றும் இவர் கண்டறிந்தார். மரங் களுக்கு மயக்க மருந்து கொடுத்துத் தீங்கு ஏற்படாமல் அவற்றைப் பெயர்த்து நடும் புதிய முறையை 1919-ல் கண்டுபிடித் தார். இவர் அமைத்த கிரெஸ்க்கோகிராப் (Crescograph) 67 GOT MILD புதிய கருவி, தாவரத்தின் வளர்ச்சியைப் பல மடங்கு பெரிதாக்கிக் காட்டியது. உறக்கம், காற்று, உணவு, மருந்துகள் முதலிய வற்றால் தாவரங்களில் ஏற்படும் விளைவு சுனைக் காட்டவும் இவர் பலவேறு நுட்ப மான கருவிகளை அமைத்தார். போஸ் தம் வாழ்நாள் முழுதும் பல அரிய ஆராய்ச்சி சுனில் ஈடுபட்டதோடு, புதிய கருத்துகளைத் தெரிவிக்கும் நூல்களையும் வெளியிட்டார். பௌத்த மதம்: உலகிலுள்ள முக்கிய மதங்களுள் ஒன்று பௌத்த மதம். இம் மதத்தை நிறுவியவர் புத்தர் (த.க.). அவ ருடைய பெயராலேயே இம்மதம் வழங்கு கிறது. இம்மதத்தைப் பின்பற்றுபவர்கள் பௌத்தர் எனப்படுவர். புத்தர் கி.மு. 6ஆம் நூற்றாண்டில் பௌத்த மதத்தை நிறுவினார். புத்தர் ஓர் அரச குடும்பத்தில் பிறந்து, இன்பவாழ்வு வாழ்ந்து வந்தார். மக்களை வாட்டும் பசி. நோய், வறுமை, மூப்பு முதலிய துன்பங்களைக் கண்டு, இன்ப வாழ்வைத்