பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

82 மதுரா - மதுரை சிறுவயதில் வேதம் பயிற்றுவிக்கும் ஒரு பள்ளியில் இவர் பயின்றார். பிறகு பெற் றோரின் இசைவு பெற்றுத் துறவியானார். வேதங்களை ஆராய்ந்து அவற்றின் உண்மை யான நுட்பப் பொருள்களைக் கூறினார். தென்னிந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த போது, சங்கரருடைய (த.க.) சீடர்களைச் சந்தித்தார். அவர்களுடன் வாதிட்டு, பிரமருத்திரத்திற்குச் சங்கரரும்இராமானு உரைகளி (த.க.) எழுதியுள்ள லிருந்து மாறுபட்டுப் புது விளக்கம் கூறினார். அச்சீடர்களின் வேண்டுகோளின் படி பிரமசூத்திரத்திற்குத் தாமே ஓர் உரை எழுதினார். பிறகு உபநிடதம், பகவத் கீதை இவற்றுக்கு விளக்க உரை களும், பாரதம், பாகவதம் ஆகியவற் றுக்கு உரைகளும் எழுதினார். சரும் வெவ் 'ஆன்மாவும், பரமான்மாவும் வேறானவை; தனித்தனி வடிவுடையவை. முத்திநிலையிலும் இவை தனித்தனி என்பது இருக்கும்' வடிவுடனேயே மத்துவரின் கொள்கை, இதுவே துவைதம் எனப்படும். இக்கொள்கையை மத்துவர் நாடெங்கும் சென்று பரப்பீனர், இவருக் குப் பலர் சீடர்களாயினர். பல இந்து அரசர்களும், முஸ்லிம் மன்னர்கள் சிலரும் இவரைப் போற்றி மதித்தனர். மத்துவா சாரியார் தம் 80ஆம் வயதில் மறைந் தார். மதுரா: உத்தரப்பிரதேசத்தில் யமுனை ஆற்றின் கரையிலுள்ள பழமை யான நகரம் மதுரா. புராணப் புகழ் பெற்ற இந்த நகரை வட மதுரை என்றும் சொல்வர். இந்துக்கள் வழிபடும் கண்ணன் பிறந்து வளர்ந்த இடம் இது. எனவே இது இந்துக் களுக்கு முக்கியமான புண்ணியத்தலமாக விளங்குகிறது. கண்ணன் வளர்ந்த கோகுலம், விளையாடிய பிருந்தாவனம் முதலியனவும் இங்கு உள்ளன. ஆற்றங் கரையில் புனித நீராடும் துறைகள் பல உள்ளன. வானளாவிய கோயில் கோபுரங் கள், மாட மாளிகைகள், அகன்ற தெருக் கள் ஆகியவை ஊருக்கு அழகு செய்கின் றன. சாங் மதுராலில் ஒரு காலத்தில் பௌத்த சமயம் பரவியிருந்தது. அக்காலத்தில் இந்தியாவுக்கு வத்த சீன யாத்திரிகர் களான பாஹியான், ஹியூன் ஆகியோர் இந்நகரைப் பற்றி எழுதியுள்ள னர். பின்னர் சமண சமயமும் இங்கு செழித்திருந்தது. இவ்விரு சமயங்களும் செல்வாக்குக் குன்றியபோது இந்து மதம் மீண்டும் செழித்தது. முஸ்லிம் மன்னர் கள் இந் நகரைச் சூறையாடி அழித் தனரெனினும், பின்னர் ஆண்ட இந்து அரசர்கள் இந்நகருக்குப் புத்துயிரளித்த னர். இங்குள்ள கண்ணன் கோயிலும், துவாரகநாதர் கோயிலும் புகழ்பெற் றவை. இந்தியாவிலேயே மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்று ரஷ்ய உதவியுடன் இந்நகரில் கட்டப்படுகிறது. மதுரை: தமிழ்நாட்டில் சென்னைக்கு நகரம் அடுத்த இரண்டாவது பெரிய மதுரை. மதுரை மாவட்டத்திற்கு இது தலைநகர். இந்நகரின் மக்கள்தொகை 5,48,300 (1971). இந்தியாவின் பழமையான நகரங்களும் ஒன்று மதுரை. இது வரலாற்றுப் புகழ் மிக்கது இராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்களிலும், அசோகர் கல்வெட்டுகளிலும் மதுரை நிறுவிய பற்றிய குறிப்பைக் காணலாம். பண்டைய ரோமானியர்களுட கிரேக்கர்களுடனும் பெருமை னும் வாணிகம் நடத்திய இதற்கு உண்டு. கோயில் தமிழ் நாகரிகத்தின் மையமாக இந் நகரம் விளங்குகிறது. சங்கங்கள் நிறுவித் தமிழ் வளர்த்த பெருமை உடையது இந் நகரம், மதுரையின் புகழ்பாடாத தமிழ் இலக்கியமே இல்லை எனலாம்! பாண்டிய மன்னர்களுக்கு இந்நகரம் நீண்ட காலம் தலைநகராக இருந்தது. இந் நகருக்கு முக்கிய பெருமை அளிப்பது இங்குள்ள மீனாட்சி கோயிலாகும். பாண்டியனுக்கு மகளாகப் பிறந்த மீனாட்சி சிவபெரு மானைத் திருமணம் செய்துகொண்டதாகப் புராணங்கள் கூறும். நகரின் நடுவில் மீனட்சி அமைந்துள்ளது. தென்னாட்டிலுள்ள மிக அழகிய கோயில்களுள் இது ஒன்று. கோயிலின் நான்கு வாயில்களிலும் உள்ள கோபுரங்கள் மிக உயரமானவை. பல புராணக்கதைகளை விளக்கும் அழகிய சுதைச் சிற்பங்கள் இவற்றில் உள்ளன. கோயிலினுள் இருக்கும் சிற்பங்களும் சிலை களும் மிக அழகியவை. அற்புதமான இச் சிற்பங்கள், தமிழர்களின் கலைத் திறனுக்குச் சான்றாக விளங்குகின்றன. கோயிலினுள் பொற்றாமரைக் குளம் உள்ளது. கோயிலுக்குள்விருக்கும் ஆயிரங் கால் மண்டபத்தின் ஒவ்வொரு தூணிலும் சிறந்த சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஒரே கல்ஸில் செதுக்கப்பட்ட ஏழு சிறிய இசைத் தூண்கள் இக் கோயிலில் உள்ளன. ஒவ்வொரு துணைத் தட்டும் போது வெவ்வேறு விதமான இசை ஒலி எழுகிறது! திருமலை நாயக்கர் என்ற மன்னரால் 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு