பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மரங்கள் - மரங்கொத்தி மரங்கள் பல ஆண்டுகள் வாழக் கூடியவை. மரங்கள் உருவத்திலும், உயரத்திலும், பருமனிலும் நீண்ட காலம் வாழ்வதிலும் மற்ற உயிரினங்களை எல்லாம் மிஞ்சிவிடுகின்றன. அமெரிக்காவி லுள்ள காலிபோர்னியாவில் காணப் படும் செக்குவாயா (Sequoia) என்னும் செம்மரம் 105 மீட்டர் உயரம் உள்ளது; அடிமரத்தின் விட்டம் 10 மீட்டர். ஆஸ்திரேலியாவில் யூக்கலிப்ட்டஸ் இனங் களில் ஒன்று 97 மீட்டர் உயரம் வளர் கிறது. செம்மரம் 3,000 ஆண்டுகளுக்கு மேல் உயிர்வாழ்கிறது. மெக்சிக்கோவில் திராக்கா (Draco) எனும் மரம் 6,000 ஆண்டுகளுக்குமேல் வாழ்வதாகக் கணைக் கிட்டிருக்கிறார்கள். அடிமரத்தைக் குறுக்கே வெட்டினால் நடுவில் மென்சோறு மென்சோறு (Pith) இருக்கும்; அதையடுத்து மரத்திகவும் அதற்கும் வெளிப்புறத்தில் பட்டையும் (Bark) இருக்கும். மரத்திசுவுக்கும், மரப்பட் டைக்குமிடையே வளர்படை (Cambium) என்று சொல்லப்படும் வளரும் பகுதி உள்ளது. இது வளர்ச்சியடைவதனால் வ்வோராண்டிலும் மரத்திசுவின் வெளிப்புறத்தில் ஓர் அடுக்கு படிகின்றது. இது சில மரங்களில் வளர்ச்சி வளையங் களாகத் (Growth rings)தெளிவாகக் காணப்படும். இவ்வளையங்கள் மரத்தின் வயதைக் கணக்கிட உதவும். சிலவகை மரங்களில் வளர்படை வளர்ந்து அடுக்கடுக்காகப் படியும். இதனால் அடிமரம் பருக்கும். பல ஆண்டு களில் உட்புறமிருக்கும் மரத்திகவும் மென் சோறும் நெரிசலினால் இறுகும். இவற் றிலுள்ள உயிரணுக்களின் வளர்ச்சி நின்று விடும். அவற்றில் டானின், ரெசின் முதலிய பொருள்கள் நிரம்பி அடிமரத் இன் மத்தியப் பகுதி இருண்ட பழுப்பு நிறமாக மாறும். இவ்வாறு சேகு அல்லது மரவைரம் (Heart Wood) தோன்றுகிறது. இவ்வகை மரங்கள் மிக்க உறுதியானவை. மரங்கள் நமக்குப் பல வழிகளில் பயன் படுகின்றன. மா, ஆப்பிள் முதலிய மரங் கள் பழம் தருகின்றன. புளிய மரத் திலிருந்து புளி கிடைக்கிறது. தேக்கு, ஈட்டி, கருங்காலி போன்றவை கதவு, நாற்காலி முதலியவற்றைச் செய்யப் பயன் படும் உயர்ந்த வெட்டு மரங்கள் (Timber) ஆகும். சில மரங்களில் நாரும், செல்லு லோஸும் அடங்கியிருப்பதால் காகிதம் செய்யவும், பிளாஸ்ட்டிக் தயாரிக்கவும் பயன்படுகின்றன. சிலவகை மரங்களி லிருந்து மர எண்ணெய், ரெசின், மெழுகு முதலியன எடுக்கலாம். ரப்பர் மரத்தி ஸிருந்து வடியும் பால், ரப்பர் தயாரிக்கப் 85 பயன்படுகிறது. பச்சை வாட்டில் மரத்தி லிருந்து கிடைக்கும் டானின் (Tannin) என்ற துவர்ப் பொருள் தோல் பத் னிட உதவுகிறது. இம்மரம் இந்தியா வில் நீலகிரியிலும் பயிராகிறது. யூக்கலிப்ட்டஸ் மரத்திலிருந்து மரத்திலிருந்து தைலம் வடிக்கப்படுகிறது. சவுக்கு மரம் பொருளாகப் பயன்படுகிறது. மரங்கள் மண் அரிமானத்தைத் தடுத்து நிறுத்து கின்றன. நிழல்தரும் பல்வேறு மரங்களைச் சாலைகளில் வளர்க்கிறார்கள். உ எரி சாலைகளில் உள்ள மரங்களின் பட்டை யைச் சிலர் உரித்து விடுவதால் புனியமரம் போன்ற பயன்தரும் மரங்கள் பட்டுப் போகின்றன. காடுகளில் மரங்களைப் பெருமளவில் வெட்டி அழிப்பதால் மழை குறைந்து நாட்டின் வளமே குன்றி விடுகிறது. சிறு மரங்கொத்தி: அழகான பறவை மரங்கொத்தி. மரப்பட்டைகளின் அடியிலுள்ள புழு, பூச்சிகளைத் தின்பதற் காக இது மரத்தைக் கொத்திக்கொண் டிருக்கும். அதனால் இதற்கு மரங்கொத்தி என்று பெயர். முட்டையிடுவதற்காகக் கூடு அமைக்கவும் இது மரத்தைத் துளைத் துப் பொந்து செய்கிறது. மரங்கொத்திகள்