பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

94 மலேசிய நகர் ஒன்றின் தோற்றம் மலேசியா - மலேரியா மொழிகள். சீளம், தமிழ் ஆகிய மொழி களும் வழங்குகின்றன. தலைநகர் கோலா லம்ப்பூர், ஈப்போ, பினாங்கு மலாக்கா ஆகியவை மற்ற முக்கிய நகரங்கள். மலேசியா ஒரு கூட்டாட்சி நாடு. மன்னர் தலைமையில் இங்கு ஆட்சி நடை பெறுகிறது. ஆனால் இம்மன்னரும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந் தெடுக்கப்படுவரே. முன்பு தனித்தனி யாக ஆட்சி செலுத்திய அரசர்கள் இன்று ஒன்பது மாநிலங்களில் அதிபதிகளாக உள்ளனர். இவர்களுள் ஒருவர் மன்ன ராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இவர் அமைச்சரவையும் நாடாளுமன்றமும் கூறும் ஆலோசனையின்படி ஆட்சி செலுத்துகிறார். மலேயா தீபகற்பத்தில் பண்டைக் காலத்தில் இந்திய அரசர்களின் ஆட்சி நடந்து வந்தது. இந்நாட்டில் கிடைத் துள்ள சமஸ்கிருதக் கல்வெட்டுகளிலிருந்து இச் செய்தி புலனாகிறது. மலாய் மொழி யில் சமஸ்கிருதச் சொற்களும் தென்னிந் திய மொழிச் சொற்களும் பல உள்ளன. பின்னர் இந்நாட்டில் இஸ்லாம் மதம் பரவியது. போர்ச்சுகேசியர், டச்சுக்காரர் ஆகியோர் பல பகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி செலுத்தினர். இறுதியாக இந்நாடு ஆங்கிலேயர் வசமாயிற்று. இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஜப்பானியர் கைப்பற்றிக் கொண்டனர். யுத்தத்திற்குப் பின் மீண்டும் இது ஆங்கிலேயர் வசமாகியது. 1957-ல் மலேயா விடுதலை பெற்றது. 1963-ல் மலேயா, சராவாக், சபா மூன்றும் இணைந்து மலேசியாவாக உருவாயிற்று. காமன்வெல்த் நாடுகளுள் (த.க.) மலேசியாவும் ஒன்று. மலேரியா : காய்ச்சலில் ஒரு வகைக்கு மலேரியா என்று பெயர். முறைக் காய்ச்சல் என்றும் இதனைச் சொல்வார்கள். வெப்பமண்டலத்தில் ஆற்றோரத்திலும் கடற்கரைப் பகுதிகளிலும் மலைப்பகுதிகளி ஆம் இந்நோய் பெருமளவில் காணப்படு கிறது.உலகில், வேறு எத்த தோயைக் காட்டிலும் மலேசியாவினால் இறந்தவர் களே அதிகம். மனிதர்களுக்கு மட்டுமின் றிக் குரங்கு. கால்நடைகள், பறவை, மீன் ஆகியவற்றுக்கும் இந்நோய் ஏற்படுவது உண்டு. மலேரியா ஒரு தொற்றுநோய். கொசு வின் மூலம் ஒருவரிடமிருந்து மற்றொரு வருக்கு இது பரவும். எல்லாக் கொசுக் களும் இதைப் பரப்புவதில்லை அனோ பிலிஸ் என்ற ஒருவகைக் கொசு மட்டுமே இந்நோயைப் பரப்புகிறது. மிக நுண்ணிய ஒருவித ஒட்டுண்ணி களே (த.க.) இந்நோய்க்குக் காரணம். இந்நோய் உள்ள ஒருவரை அனோபிலிஸ் கொசு கடித்து, இரத்தத்தை உறிஞ்சும் போது சில மலேரியா ஒட்டுண்ணிகள் கொசுவின் உடலினுள் செல்கின்றன! இவை உடலினுள் ஏராள மாகப் பெருகுகின்றன. பிறகு அக் கொசு மற்றொருவரைக் கடிக்கும்போது இவ் வொட்டுண்ணிகள் அவருடைய உடலுக் குள் சென்று அங்கு மிகப் று பலவாகப் பெருகி நோயை உண்டாக்குகின்றன. கொசுவின் மலேரியா காய்ச்சல் ஏற்படும்போது முதலில் தாங்க முடியாத குளிரும் நடுக்க மும் இருக்கும். பிறகு உடல் சுடும்; வெப்ப நிலை மிக உயரும்; கண்கள் சிவக்கும்: வாந்தியும் ஏற்படுவதுண்டு. சில மலேரியாவுக்குக் காரணமான கொசுக்களை அழிக்க மருந்து தெளிக்கிறார்கள் மணி