பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வெட்டுக்கிளி - வெடிமருந்து


ஹெர்க்குலேனியம் ( Herculaneum), ஸ்ட்டே பியீ ( Stabiae ) முதலியன புதையுண்டு அழிந்தன. அதன் பிறகு இம்மலை அடிக்கடி வெடித்திருக்கிறது. அதன் காரணமாக ஆயிரக் கணக்கான மக்கள் உயிரிழந் திருக்கின்றனர்; பல ஊர்கள் அழிந்து விட்டன. இந்த எரிமலை இறுதியாக 1944ஆம் ஆண்டில் பொங்கியபோது சான் செபாஸ்ட்டியானோ என்ற ஊர் அழிந்தது. இவ்வித ஆபத்து இருந்தாலுங்கூட, இம் மலையின் அடிவாரத்தில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். எரிமலையின் குழம்பு படிந்த மண் மிகச் செழிப்பாக மாறு கிறது. எனவே இப் பகுதிகளில் மது தயாரிக்கப் பயன்படும் திராட்சையைப் பெருமளவில் பயிரிடுகின்றனர்.

எரிமலையின் சரிவில் ஆராய்ச்சி நிலையம் ஒன்றை அமைத்து எரிமலையின் தன்மையை ஆராய்ந்து வருகின்றனர். எரிமலையின் சிகரத்திற்கு அருகே மக்கள் சென்று பார்ப்பதற்காக மலையின் மீது ரெயில் பாதையும் அமைத்துள்ளனர்.

வெட்டுக்கிளி : புல் தரையில் நடந்து செல்லும்போது வெட்டுக்கிளிகள் தாவிப் பறந்து செல்வதைப் பார்த்திருப் பீர்கள். இது பூச்சி இனத்தைச் சேர்ந்தது.

வெட்டுக்கிளிகளில் பலவகை உண்டு. சில சிறியவையாகவும் மற்றும் சில பெரியவையாகவும் இருக்கும். சில பச்சை நிறமானவை. இவை புல், இலை தழை களின் மீது இருப்பது நமக்குத் தெரியாது. மரக்கிளைகளில் உள்ள சில வெட்டுக் கிளிகள் மரப்பட்டையைப் போன்று பழுப்பு நிறமாகத் தோன்றும். இவ்வாறு சூழ் நிலைக்கேற்ப இவற்றின் நிறம் இருக்கும். எதிரிகளிடமிருந்து தப்பு வதற்கு இந்த நிறம் உதவுவதால் இதற்குப் பாதுகாப்பு நிறம் (த.க.) என்று பெயர். வெட்டுக்கிளிக்கு ஆறு கால்கள் உண்டு. உடலின் முன்பாகத்திலுள்ள இரு கால்கள் சிறியவை; நடுப்பாகத் திலுள்ள மற்ற இருகால்கள் சற்று நீளமானவை. ஆனால் பின்பாகத்திலுள்ள எஞ்சிய இரு கால்களும் பெரியதாகவும் நீளமாகவும் உள்ளன. இந்தப் பின் கால்களின் உதவியால் தான் வெட்டுக்கிளி வெகு தூரம் தாவுகிறது. வெட்டுக்கிளிக்கு நான்கு இறக்கைகள் உண்டு. இறக்கை களை ஒன்றுடன் ஒன்று உராய்ந்தோ அல்லது கால்களுடன் இறக்கையை உராய்ந்தோ வெட்டுக்கிளி ஒலி எழுப்பு வது உண்டு.

வெட்டுக்கிளிகளில் இருவகை

வெட்டுக்கிளியின் தலையில் இரு உணர் கொம்புகள் உள்ளன. இவற்றால் வெட்டுக் கிளி மோப்பம் அறியும். ஒவ்வோர் உணர் கொம்பின் அடிப்பகுதியிலும் புள்ளி போன்ற மூன்று சிறு கண்கள் உள்ளன. இந்தச் சிறு கண்களுக்கு அருகில் இரண்டு பெரிய கூட்டுக் கண்களும் உள்ளன .. ஒவ் வொரு கூட்டுக் கண்ணிலும் நூற்றுக் கணக்கான நுண்ணிய கண்கள் உண்டு. இவற்றால் ஒரே சமயத்தில் பல்வேறு திசைகளிலும் வெட்டுக்கிளி பார்க்க முடியும். காதுகள் உடலின் இரு பக்கங்களிலும் அமைந்துள்ளன. சவ்வு போன்ற உறையினால் காதுகள் மூடப் பட்டிருக்கும். வெட்டுக்கிளியின் வயிற் றருகில் நுண்ணிய சிறு தொளைகள் உள்ளன. இவற்றின் வழியாக இது சுவாசிக்கிறது. பெண் வெட்டுக்கிளி குழிதோண்டி அதனுள் முட்டையிடும். முட்டையி லிருந்து வெட்டுக்கிளி வெளிப்படும் சமயத்தில் அதற்கு இறக்கைகள் இருப்ப தில்லை ; பின்னரே வளரும். சில வெட்டுக்கிளிகளால் மனிதர்களுக்குப் பெரும் நட்டம் ஏற்படுவதுண்டு. இவை கோடிக்கணக்காகப் பெருகி, ஓரிடத்தி லிருந்து மற்றோரிடத்திற்குப் பறந்து சென்று பயிர்களைத் தின்று பாழ் செய்கின்றன. இதனால் உணவுப் பஞ்சம் ஏற்படுவதுண்டு. வெடிமருந்து : தீபாவளியன்றும், பிற விழாக்களின்போதும் பட்டாசுகளை வெடித்தும், வாணங்களைக் கொளுத்தி யும் மகிழ்கிறோம். இந்தப் பட்டாசு களையும், வாணங்களையும் தயாரிப்பதற்குப் பயன்படுவது வெடிமருந்து. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியரும், சீனர்களும், அராபியர்களும்