பக்கம்:கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

குழுத் தலைவர் நிற்க வேண்டும்.

போட்டியைத் துவக்கியவுடன், பந்துடன் நடுவில் நிற்கும் குழுத் தலைவர், தன்னிடமுள்ள பந்தை, எதிரே. வட்டத்தில் நிற்பவர் ஒருவரிடம் எறிய, பந்தைப் பெற்றுக் கொண்டவர் மீண்டும் அந்தப் பந்தைத் தலைவரிடம் எறிய பிடித்துக் கொண்ட தலைவர் மீண்டும் முதலில் ஆடியவருக்கு வலப்புறம் நிற்பவரை நோக்கி எறிய, அவர் மீண்டும் தலைவருக்கு வழங்கவேண்டும்.

மேற்கூறியவாறு, பந்தை மாறிமாறிப் போட்டுப் பிடித்துக் கொண்டு, வட்டத்தில் உள்ள அனைவருக்கும் ஒரு முறை பந்தைப் பிடித்து, எறிகின்ற வாய்ப்புக் கிடைக்குமாறு ஆடி முடிக்க வேண்டும்.

முதலில் முடிக்கின்ற குழுவே வெற்றி பெறுகிறது. குறிப்பு: பந்தைப் பிடிக்கும்பொழுது கை தவறி விட்டால், அதற்குப் பொறுப்பாளர்தான் ஓடிச் சென்று பந்தை எடுத்து வந்து ஆடவேண்டும்.


94. வட்டத்தில் தொட்டாடுதல்

முன் ஆட்டம் பேலவே, குழுக்கள், தங்களுக்குள்ள இடத்தில் வட்டமாக நிற்கவேண்டும். எப்பொழுதும் போல், எல்லா வட்டத்தின் அமைப்பும் அளவும் ஒரே மாதிரியாக அமைந்திருக்க வேண்டும்.

போட்டியைத் தொடங்கலாம் என்றதுமே, ஒவ்வொரு குழுவிலும் உள்ள ஒருவர், அதாவது