பக்கம்:கேரக்டர்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

139

கடைசிலே பாரு! ஒரு சின்ன விஷயம் தொந்தரவாப் போச்சு, லௌட் ஸ்பீக்கருக்குப் போலீஸ் லைசென்ஸ் வாங்கல்லே. நான் உடனே போலீஸ் ஸ்டேஷனுக்குப் போன் பண்ணினேன். அந்த ஸப் இன்ஸ்பெக்டர் எனக்குத் தெரிஞ்சவன், விஷயத்தை அவன்கிட்டே சொல்லி லைசென்ஸ் வேணும்னேன். 'பணம் கட்டணும்;'ஒரு வாரத்துக்கு முன்னாலே அப்ளிகேஷன் போடணும் அது இதுன்னான். இத பாரு, எனக்கு அதெல்லாம் தெரியாது: இன்னைக்கே லைசென்ஸ் வேணும் முதல்லே லைசென்ஸை அனுப்பி வை. அப்புறம் மற்ற விஷயங்களை பாத்துக்கலாம்'னேன். அவ்வளவுதான்; லைசென்ஸ் கதறிண்டு வந்துட்டுது. ஏன்? சும்மாவா? அந்த ஸப் இன்ஸ் பெக்டருக்குப் பிரமோஷனுக்கு ஐ.ஜி.கிட்டே இந்த நாகசாமிதானே ரெகமண்ட் பண்ணி ஆகணும்?"

இந்தச் சமயம் யாரோ ஒருவர் வந்து நாகசாமியைக் கூப்பிட்டார்.

"சரி; ஈஜிப்ட்லேருந்து காட்டன் மர்ச்செண்ட்ஸ் சிலபேர் வராங்களாம். நான் போயிட்டு வரேன். இந்த நாகசாமியைக் கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்க விடுவாளா, என்ன?.. உம், காரை எடுக்கச் சொல்லு" என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/139&oldid=1481408" இலிருந்து மீள்விக்கப்பட்டது