பக்கம்:கேரக்டர்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

டிரங்குப் பெட்டியைத் திறந்தால் பிரபல சினிமா நட்சத்திரங்களின் வர்ணப்படங்கள் ஒட்டப்பட்டிருக்கும்.

'புஸ்' என்று வளர்ந்து புதர்போல பூத்து நிற்கும் கிராப்பு. சலவையிலிருந்து வந்த மெல்லிய மல்ஜிப்பா. அதற்குள்ளே வலை பனியன். கழுத்தைக் சுற்றிலும் 'டெக்னி கலர் கர்சிப்' தெரியும் ஒன்று. கழுத்திலே மெல்லிய சங்கிலி; நெற்றியிலே பெரிய குங்குமப் பொட்டு.

தினம் 'டியூடி' முடிந்தவுடன் அவசர அவசரமாக அவன் தன்னை ஒருவிதமாக 'மேக்—அப்' செய்துகொண்டு 'நைட்ஷோ' வுக்குக் கிளம்பிவிடுவான்.

யாராவது உப நடிகர்களோ, ஸ்டுடியோக்களில் வேலைசெய்பவர்களோ, அவன் ஓட்டலுக்கு வந்து விட்டால் போதும். சந்தானம் அவர்களை விடவே மாட்டான். 'வாங்க அண்ணா' நீங்க, 'பாட்டியே தாத்தாவின் பத்தினி' என்கிற படத்திலே காமெடியனாக நடிச்சிருக்கீங்களே. நான் நேற்றுத்தான் பார்த்தேன்! சொல்றேன்னு கோவிச்சுக்காதீங்க! படம் சுமார்தான். போட்டோகிராபி ரொம்ப மட்டம். ரிகார்டிங்கும் மோசந்தான். படம் உங்களாலேதான் ஓடறது. எனக்குக்கூட சினி மாவிலே ஆக்ட் பண்ணனும்னு சொம்பநாளா ஆசை. நீங்க மனசு வைத்தால்..." என்று ஓர் அசட்டுச் சிரிப்புச் சிரிப்பான்.

செவ்வாய்க்கிழமை யன்றுதான் 'மனோகரா கபே'க்கு வார விடுமுறை. ஆனால் அன்றுதான் சந்தானத்துக்கு வேலை அதிகம்! காலை ஏழு மணிக்கே புறப்பட்டுவிடுவான். கோடம்பாக்கம் ரயில்வே கேட்டுக்கருகே போய் நின்று கொண்டு ஸ்டுடியோக்களுக்குச் செல்லும் கார்களையும், நட்சத்திரங்களையும் சென்ஸஸ் எடுத்துக்கொண்டிருப்பான். அது முடிந்ததும் தி.நகர், காந்தி நகர், கோபாலபுரம் என்று நட்சத்திரங்கள் வாழும் க்ஷேத்திரங்களுக்கெல்லாம் ஒருமுறை சென்று தரிசித்துவிட்டு வருவான்.

சினிமா நட்சத்திரங்களின் வீட்டு விலாசங்கள், அார் நம்பர்கள் எல்லாம் டயரியில் எழுதிவைத்துக்கொண்டு தன் நண்பர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/16&oldid=1478761" இலிருந்து மீள்விக்கப்பட்டது