பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெடுமாறன் தேவி 93 பூண்ட அந்தணச் சிறுவர் சிவனருள் பெற்ற செல்வ ராகத் திகழ்ந்தனர். சிவபெருமான் திருவருளால் உமாதேவியார் உவந்தளித்த ஞானப்பாலே உண்டு, மூன்ருண்டுப் பருவத்திலேயே கலைஞானம் கைவரப் பெற்ற அருளாளராக அவர் விளங்கினர். அத ேைலயே ஞானசம்பந்தர் என்று நல்லோர் ஏத்தும் சீர்த்தி எய்தினர். கற்றமிழ் வல்ல நாவலராய், நல்லிசை வல்ல பாவலராய்த் திகழ்ந்த திருஞான சம்பந்தர், தம்மை யொத்த செம்மை வாய்ந்த சிவத் தொண்டராகிய திருநாவுக்கரசருடன் திருமறைக்காடு என்னும் தலத்திற்கு எழுந்தருளியிருக்கும் செய்தியை ஒற்றர் வாயிலாகக் கேள்வியுற்றனர் குலச்சிறையார். அச்செய்தியினை ப் பாண்டிமாதேவியாராகிய மங்கையர்க்கரசியாருக்கு அமைச்சராகிய குலச்சிறை யார் அறிவித்தனர். அப்பெருமானுர் ஆற்றி வரும் அற்புதங்களையும் அரிய சைவத் திருப்பணிகளையும் பற்றி உரையாடி மகிழ்வுற்றனர். இத்தகைய திரு ஞானசம்பந்தர், நம் பாண்டி காட்டிற்கு எழுங் தருளினல் சமணிருள் நீங்கிச் சைவப்பேரொளி பரவும் என்று இருவரும் கருதினர். சம்பந்தருக்குத் தூதனுப்புதல் உடனே, அவர்கள் அப்பெருமானே மதுரை மாநகருக்கு எழுந்தருளுமாறு செய்யத், தக்க ஏவலா ளரை அவர்பால் துாது விட்டனர். அவர்களும் திருமறைக்காட்டை அடைந்து சீர்காழிச் செல்வராகிய ஞானசம்பந்தப் பெருமானின் திருவடிகளைத் தொழு தனர். அவர் திருமுன்பு பாண்டிமாதேவியாரும் குலச்சிறையாரும் கூறி யனுப்பிய வேண்டுகோளைப்