பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெடுமாறன் தேவி 107 புனல் வாதம் இங்ங்னம் இருமுறை தோற்ற சமணரைப் பாண்டியன் இகழ்ந்து பேசின்ை. அதனையும் பொருட் படுத்தாத அமணர், 'இனி ஒரு முறை ஒட்டுவோம்: நம் ஏடுகளே ஒடும் நீரில் இடுவோம்' என்று கூறினர், இவ்வேளையில் அமைச்சராகிய குலச்சிறையார் குறுக் கிட்டு, 'இம்முறையில் தோற்றவர் என்னுவது என் பதையும் துணிய வேண்டும்” என்றனர். அப்பொழுது சமணர் சற்றும் ஆராயாமல், தோற்றவரை அரசன் கழுவில் ஏற்றுவான்' என்று கூறினர். பின்னர்ப் புனல் வாதம் நடத்தும் பொருட்டு அனைவரும் வையைக் கரை அடைந்தனர். அப்பொழுது கார்காலமாதலின் வையையில் நீர் பெருகிச் சென்றது. சமணர் அத்தி நாத்தி' என்னும் மந்திரச் சொல்லே எழுதிய ஏட்டை ஆற்று வெள்ளத்தில் இட்டனர். அவ்ஏடு வெள்ளம் சென்ற திசையிலேயே விரைந்து ஓடியது. சம்பந்தர் தமது ஏட்டையும் வெள்ளத்தில் இட்டனர். அவ் ஏடோ விரைந்து செல்லும் வெள்ளத்தை எதிர்த்து மேல்நோக்கிச் சென்றது. அதனேக் கண்ட அரசனும் மக்களும் வியந்து கைகுவித்து வணங்கினர். குலச் சிறையார் கொண்ட மகிழ்ச்சிக்கு ஓர் எல்லேயில்லை. அவ்ஏட்டில் வரைந்த, o ೧T¢ಹ அந்தணர் வானவர் ஆனினம் வீழ்க தண் புனல் வேந்தனும் ஓங்குக ஆழ்க தீய(து).எல் லாம்.அரன் நாமமே குழ்க வையக மும்துயர் தீர்கவே." என்னும் அப்பொருண்மொழிப் பாடலில் வேந்தனும் ஓங்குக' என்று சம்பந்தர், மன்னனே வாழ்த்தியருளிய காரணத்தால் கரையில் கின்று அக்காட்சியைக் கண்டு.