பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

412 கோப்பெருந்தேவியர் விக்குமாறு வேண்டினன். தம்பியின் வேண்டுகோளே நிறைவேற்ற விரும்பிய தமையனுகிய வரதுங்கன், 'தம்பி! நீயோ தென்மொழி வடமொழியாகிய இரு மொழிக் கடவின் நிலைகண்டு உணர்ந்தவன். அத் தகைய நீ அமைத்த காவியம் மிகவும் அருமையாகவே இருக்கும். அதனை யான் படித்துப் பார்த்தோ பகர வேண்டும்! நீ இந்நூலுள் குறித்துள்ள பொருள்தான் யாதோ?’ என்று கேட்டான். கிடத நாட்டை ஆண்ட நீள்புகழ் வேந்தனகிய களனது சுவை மிக்க வரலாறே இந்நூல் சொல்லும் பொருளாகும்' என்று இயம்பினுன் அதிவீரராமன். வரதுங்கன் சிவபத்தி மூத்தவனகிய வரதுங்கன் முக்கட் பெருமானிடம் மிக்க பத்தி பூண்டவன். இறைவனது நிறைபுகழைப் பாடுவதே இருவினையும் அகல்வதற்கு உரிய வழியாகும் என்பதை நன்கு உணர்ந்தவன். 'இருள்சேர் இருவினையும் சேரா, இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.” என்னும் தெய்வப் புலவர் திருவாக்கின் அருமையை அனுபவத்தில் கண்டு இன்புற்று வருபவன். அவன் சிவனடி மறவாத சிந்தையால் நாள்தோறும் தவருது சிவபூசை செய்துவரும் திருவருட் செல்வகைத் திகழ்ந்து வந்தான். ஒவ்வொரு நாளும் அவ் வரதுங்கன் கருவைப் பதியில் மருவும் பெருமானக் கருத்துள் இருத்திக் காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்க நின்று வழிபடும் செல்வன். உலகில் பிறந்திறக்கும் மக்களைப் பாடுவதெல்லாம் பாழ்கரகப் படுகுழியில் வீழ்வதற்கே காரணமாகும் என்னும் கருத்துடையவன்.