பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாவண்கிள்ளியின் கேவி 49 உலக வறவியில் காஞ்சனன் காயசண்டிகையின் கணவனகிய காஞ்சனன், தன் மனைவிக்கு விருச்சிக முனிவன் கொடுத்த சாபம் விடுத்து நீங்கும் காலம் கழிந்தும் அவள் வாராமையின் காரணம் யாதோ என்ற கவலையுடன் காவிரிப்பூம் பட்டினத்தை வந்தடைந்தான். அங்குள்ள மன்றும் பொதியிலும் மாதவரிடங்களும் மலர்ச்சோலைகளும் ஆகிய இடங்தொறும் தேடித்திரிந்து இறுதியில் உலக வறவியை வந்துற்ருன். அங்குக் காயசண்டிகை வடிவுடன் கின்றுகொண்டிருக்கும் மணிமேகலையைக் கண்டான். அவளைத் தன் மனைவியாகிய காய சண்டிகை என்றே துணிந்தான். அவள் அருகில் சென்று அன்புடன் உரையாடத் தொடங்கின்ை. பழைய நட்பினைப் புலப்படுத்தும் மொழிகள் பல வற்றைப் பகர்ந்து அவளைப் பாராட்டின்ை. உதயகுமரனுக்கு அறிவுரை மணிமேகலை அவற்றைச் சிறிதும் மதியாமல் அங்கு கின்ற உதயகுமரனே அணுகினள். அவனுக்கு இளமையின் நிலையாமையை எடுத்துரைக்க நினைக் தாள். அங்கே இயல்பாக வந்த முதுமகள் ஒருத்தியை அவனுக்குச் சுட்டிக்காட்டினள். இளமையில் வனப் புடையனவாய் இருந்த அவள் உறுப்புக்கள் முதுமை யில் இயல்பு திரிந்து வெறுப்பூட்டுவனவாய் இருப் பதைப் புலப்படுத்தினுள். காஞ்சனன் கடுஞ்சினம் இச் செயலைக் கண்ணுற்ற காஞ்சனன், என்னைப் பிறன்போல் நோக்கும் இப் பேதையாள் அயலான் பின்னே காதல் குறிப்புடன் பெயர்கின்ருள் ; இவ்