பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூதப்பாண்டியன் தேவி 73 ஏற்ற பூதப்பாண்டியன் ஒல்லையூர் காட்டினை இழந்த தால் உற்ற தொல்லையினை உணர்ந்தான். அங். நாட்டைக் கைப்பற்றிக் குடியின் பெருமை குன்ருமல் காக்கத் துணிந்தான். போரில் வல்ல வீரனுகிய பூதப்பாண்டியன் பெரும்படை யொன்றைத் திரட்டின்ை. சோழனே ஒல்லையூர் எல்லையில் சென்று எதிர்த்தான். அவனே அலறத் தாக்கி அங்காட்டினின்று ஒட்டினன். அதன் பின்னர் ஒல்லையூர் நாடு மீண்டும் பாண்டியர்க்கு உரிய தாயிற்று. ஒல்லையூரை இழந்ததல்ை பன்னட்களாகப் பாண்டியர்க்கு இருந்து வந்த பெரும்பழியை அகற்றி அரும்புகழை நாட்டிய அரசனகிய பூதப்பாண்டியனைப் பாண்டி நாட்டு மக்கள் எல்லோரும் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்' என்று உவந்து பாராட்டினர். அரசனின் ஆருயிர் நண்பர்கள் இப் பாண்டியனுக்குத் திதியன் என்பான் இனிய நண்பன். அவன் பொதிய மலேயைச் சார்ந்த நாட்டிற்கு உரியவன்; இன்னிசை வழங்கும் வாழ்த் தியம் இயம்புவதில் வல்லவன் ; விற்போர் புரிவதிலும் மிக்க விறல் படைத்தவன். இத்தகைய திதியனைத் தனது ஆட்சிக் கீழ் அடங்கிய ஒரு சிற்றரசன் என்று எண்ணுது அவனது வீரத்தினேயும் அரிய இசைத் திறனையும் வியந்து பாராட்டின்ை பூதப்பாண்டியன். இவனுக்கு அத் திதியனேயன்றி வேறு கண் போன்ற, நண்பர்கள் சிலர் இருந்தனர். அவர்களே யெல்லாம் இம்மன்னன் தன்னுடைய பாடலில் விருப்புடன் குறிப்பிடுகிருன். கோ-6