பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘84 கோப்பெருந்தேவியர் メ இங்ங்னம் கல்விச் சிறப்பையும் கற்றலின் இன்றி யமையாமையையும் நன்ருக விளக்கிய பாண்டியன் நெடுஞ்செழியன் தானும் பெரும்புலவகை விளங்கி யவன். அவன் கலைச்சுவையினைக் கண்டுணர்ந்து துய்த்ததோடன்றி மற்றவரும் அக்கலைச்சுவையைப் பெறுதற்கு வழி வகுத்தான். அவன் அறநூல்களில் கற்றுணர்ந்தவாறே அரசையும் வாழ்வையும் அழ குறவும் திறம் பெறவும் நடத்தினன். மதுரைக்குக் கோவலன் வருகை இம்மன்னன் மதுரை மாநகரிலிருந்து அறநெறி வழுவாது பாண்டிய நாட்டை ஆண்டு வருங்கால் காவிரிப்பூம்பட்டினத்தில் தோன்றிய பெருங்குடி வணிகனுகிய மாசாத்துவான் மகன் கோவலன் தன் மனைவியாகிய கண்ணகியுடன் அந்நகரை அடைந்தான். அவன் தன் மண்வியின் காற்சிலம்பை விற்றுக் கிடைத்த பொன்னே வணிகமுதலாகக் கொண்டு வாணிகம் நடத்தும் விருப்புடன் அங்கு வந்தான். கோவலனும் பொற்கொல்லனும் சமணப் பெண்துறவியாகிய கவுந்தியடிகளின் துணையைப் பெற்று மதுரை மாநகரை அடைந்த கோவலனும் கண்ணகியும் அங்குகளின் புறஞ்சேரியில் வாழ்ந்த மாதரியின் மனேயகத்தே தங்கினர். அங்கு இருவரும் தனிமனேயொன்றில் கனிசுவை உணவு சமைத்து உண்டு களைப்பாறிய பின், கோவலன் தன் மனைவியாகிய கண்ணகியின் காற்சிலம்பை எடுத்துக் கொண்டு பொன்வாணிகம் நடைபெறும் கடைத்தெரு வழியே கடந்து சென்ருன். இடைவழியில் ஆரவாரத்