பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i08 திரையன் 'கொங்கர் ஒட்டி, நாபெல தந்த பசும்பூட் பாண்டியன். (அகம் : உடுக.) 'கடகைக் கோழி வாகைப் பறந்தலைப் பசும்பூட் பாண்டியன் வினேவல் அதியன் களிருெடு பட்ட ஞான்றை ஒளிறுவாட் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே.”(குறுங்கடகக.) சொங்கரின் படைவன்மை கண்டு அஞ்சினர், பேரா சர் மூவர் மட்டுமே யல்லர்; பேரரசர்க்கு அடங்கியும், அடங் காதும் அரசோச்சி வந்த குறுகில மன்னர் சிலரும், அக் கொங்கர் ஆற்றல்கண்டு அஞ்சினர்; அன்னருள் ஒருவயை ஆய் அண்டிரன், அக்கொங்கரை வென்றதோடமையாது, அவர், வேற்படை முதலாம் தம் எண்ணற்ற படைக்கலங் களைக், களத்தே போட்டுவிட்டு, மேலைக்கடல் நோக்கி ஒடி ஒளியுமாறு துரத்தியும் அழித்தான். ' கொங்கர்க் * குடகடல் ஒட்டிய ஞான்றைத் ് தலைப்பெயர்த் திட்ட வேலினும் பலவே.’ (புறம் : க.க.0) இவ்வாறு, தமிழ் நாடாண்ட பேரரசர் பலரும் கண்டு அஞ்சுமாறு, ஆண்மையும், ஆனிரைச்செல்வமும் அள விறந்தன பெற்று வாழ்ந்த கொங்கர், இறுதியில் சோ இனத்தோடு சேர்ந்தோராகக் கருதப் பட்டனரேனும், அவர் வாழ்க்க நாடு, கொங்குநாடு என அவர் பெயரின லேயே இன்றும் அழைக்கப் பெறுகிறது. அங்காட்டில் வாழ்ந்த அரசர்களும், கொங்குவேளிர், கொங்குதேச ராசாக்கள் எனப் பிரித்தே அழைக்கப் பெற்றுள்ளனர். கொங்கர், கொங்கர் கொங்குவேளிர், கொங்குதேச ராசாக் கள் என, யாண்டும் பன்மையில் வழங்கப் பெற்றுள்ளனரே பல்லால், அவருள் எவரும் ஒருமையில் வழங்கப் பெற்ரு JöyüófᎢ .