பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங். மடல் பாடிய மாதங்கீரனுர் மாதங்கீரனர் என்ற இய ற்பெயரினராய இவர் மட லேறுதல் என்ற துறையை விளங்கப் பாடிய சிறப்பால் மடல்பாடிய மாதங்கீரனுர் என்று அழைக்கப்பெற்ருர். தான் விரும்பிய தலைவி யொருத்தியைப் பெறமாட்டா மையால் காமம் மிக்க தலைவன் பனைமடலால் குதிரையைப் போல ஒருருவம் அமைத்து, அதன் கழுத்தில் மணி, மாலை முதலியவற்றைப் பூட்டித், தன் உடல் முழுதும் நீறு பூசிக் கொண்டு, எருக்கமாலே, ஆவிரம்பூமாலே, வெள்ளென்பு ஆகியவற்றையும் அணிந்துகொண்டு, தன் உருவத்தையும் தலைவியின் உருவத்தையும் ஒரு படத்தில் எழுதிக் கையி லேந்திக்கொண்டு, தலைவியின் ஊரார் யாவரும் அறியுமாறு ஊர்ந்து வந்து மன்றம் சேர்வன். அங்கனம் அவன் வரு வதைக்கண்ட ஊரினர் அவன் கையில் ஏந்திய படத்தால், 'இவளுக்கும், இவனுக்கும் கட்பு உண்டு' என அறிந்து பழி கூறுவர்; நாண் இழந்து மடலேறி மன்றம் புகுந்த தலைவனே, இன்னள் செய்தது இது' என வெளிப்படக் கூறுதலும் உண்டு ; அதுகேட்ட சான்ருேர், அவனுக்கு, அவளே மணம்புரிவிக்கத் துணைபுரிவர் ; ஊரார் கூறும் பழியுரைகேட்டுத் தம் மகளேத் தமரே முன்வந்து அவ: லுக்கு மணஞ்செய்து தருதலும் உண்டு. இங்கிகழ்ச்சியே மட லேறுதல் என நூல்களில் வழங்கப்பெறும்; தலைவன் மட் லேறி மணம்புரிதல் அன்புடைக் காமமாகாது, பெருக், தினேயின்பாற்படும் ஆதலின், அவன் மடலேறி மன்றம் புகுவேன்' என்று கூறுதலன்றி, மடலேறுதல் வழக்க மன்று தலைவகுயின் மடலேறுவன்' என்ருவது கூறுவன்;. தலைவி அதையும் கூருள் கூறுதல் அவள் பெண்மைக்கு இழுக்காம் என்று கூறுவர் ஆசிரியர் தொல்காப்பியர்ை. மடல்பாடிய மாதங்கீரனர், தாம் பாடிய இரண்டு. செய்யுட்களிலும், இம்மடலேறற் பொருளேயே கொண்டு: பாடியுள்ளார். - r - -