பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 உவமையாற் பெயர்பெற்ருேர்

உள்ளம் பகைவர் நாடுமீது படையெடுத்துச்செல்ல இக் காலம் எத்துணை நல்லகாலம் என எண்ணுகிறது; உழவன்

உள்ளம், பயிர்களுக்கு இளைப்பின்றி நீர்பாய்ச்ச இன்பம்

அளிக்குமே இக்கால்ம் என எண்ணுகிறது; கள்ளர்

உள்ளம், தம் தொழிலைத் தடைசெய்கின்றதே இங்கில

வொளி என அத்திங்களைக் காய்கின்றது; இளைஞர்

உள்ளம், மணல்வீடு கட்டி மகிழ்ந்து விளையாடத் துள்ளு

கிறது. மணமகன் ஒருவனேப்பற்றி எண்ணுங்கால், மண

மகள் தந்தை, மணமகனின் கல்வியின் மாண்பை நோக்கு

கின்ருன் , மணமகள் தாய், மணமகனின் செல்வச் செருக் கில் சிந்தனை செலுத்துகிருள்; மணமகள், மணமகனின்

அழகிலும் ஆண்மையிலும் அறிவை இழக்கிருள்;

ஆாணம் காண்’ என்பர் அந்தணர்; யோகியர் ஆகமத்தின் காரணம் காண்’ என்பர்; காமுகர் காமநன் னுாலது”என்பர்; 'ஏரணம்காண்’ என்பர்; எண்னர்;'எழுத்து என்பர் இன்புலவோர்;

ாேனங் காயசிற் றம்பலக் கோவையைச் செப்பிடினே ?

என்ற செய்யுளும் இக்கருத்தே கூறுதல் காண்க. புகார் நகரத்தே இந்திரவிழா சிறப்பாக நடைபெறுகிறது. ஆனல், கோவலனேடு கூடியுறையும் வாய்ப்பினளாப மாதவி, மகிழ்ச்சியாற் சிறந்து விழாக் காணச் செல்லுகிருள்; அவனைப் பிரிந்துறையும் பெருங் துன்பினளாய கண்ணகி கருங்கண்ணளாய்க் கலங்கி கிற்கின்ருள் என்ற காட்சிகளைச்

சிலப்பதிகாரம் சித்திரித்துக் காட்டுவதையும் காண்க.

இவ்வாறு காணப்படும் ஒரேபொருள் காண்பார்தம் தகுதிக்கேற்ப அவர்தம் உள்ளத்தே பல்வேறு வகைப்பட்ட கருத்துக்களைத் தோற்றுவிப்பதே அன்றி, கானுகின்ற ஒருவர் உள்ள்த்திலேயே காலவேறுபாட்டான், வேறுபட்ட கருத்துக்களைத் தோற்றுவிப்பதும் உண்டு, ஞாயிற்றின் தோற்றம் என்றும் ஒன்ருகவே இருப்பினும், அதை இளமையில் கண்டக்கால் எழுந்த உள்ளக்கிளர்ச்சி, ஆகு முகமையில் அதைக் காணுங்கால் உண்டாகுதல்