பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 உவமையாற் பெயர்பெற்ருேர்

களில் கிற்கும் பசும்பொன் தூண்களில் முத்துச்சாங் களே முறைமுறையே காலவிடுவர்; வீதிகளிலும், மன்றங் களிலும் பழமணல் மாற்றிப் புதுமணல் பரப்புவர் ; மாடங்களிலும், வாயில்களிலும் வகைவகையான கொடி களைக் கட்டிப் பறக்கவிடுவர்; ஊர்களில் உள்ள கோயில் களில் எல்லாம், சிறப்பும் பூசனேயும் சிறக்க மேற்கொள் வர்; மணல் பரந்து தண்ணெனக் குளிர்ந்த பந்தர்களிலும், தாழ்ந்து கிழல்தரும் மரத்தடிகளிலும், அறவோர் பலர் அமர்ந்து அறவுரைகூறி, அகமகிழ்வர் ; பல்வேறு நாடுகளி னின்றும் போந்த பல்வேறு சமயக் கணக்கர் பட்டி மண்ட பத்தே ஒருங்கிருந்து சமய உண்மைகளே உணர்த்தியும் உணர்ந்தும் உறுதொழில் புரிவர்; மக்கள் கண்கவர் அணி யும் ஆடையும் அணிந்து விழாக்கான விரைந்து செல்வர்; வந்த மக்கள் விழாகிகழ் வீதிகளில் ஆங்காங்கே நடை பெறும் அற்புத நிகழ்ச்சிகளைக் கண்டு கண்டு மகிழ்வர்; கள்ளுண்டுகளிப்போன் பின்செல்வோர் சிலர்; மையலுற்ற மகன் செயல் கண்டு மகிழ்வோர் சிலர் பேடிக்கூத்தர் பின் சென்று அவர் ஆடல் கண்டு மகிழ்வார் சிலர்; வீதி யில் இருமருங்கும் உள்ள வீடுகளின் வெண்சுதை மீது வித் தகப்படம் எழுதப்பெற்று விளங்கும் கண்கவர் ஒவியங் களைக் கண்டு சிற்பர் சிலர். கார்த்திகை விழாப்போன்ற நாட்களில், மலைகளின் மீதும், மனேகளிலும் விளக்குகளே வரிசை வரிசையாக ஏற்றி மகிழ்வதும் உண்டு ; இத்தகைய விழாகிகழ் ஊர்கள், விழா நிகழா ஏனேய நாட்களிலும், விழாநிகழ் காலத்தே பல்லாற்ருனும் பொலிவுற்றுத் தோன்றும். -

பழந் தமிழ்நாடு, இத்தகைய விழாப் பல கண்டு விறு கொண்டதே எனினும், அமைதி கிறைந்த வாழ்வினை அர் நாட்டு வாழ்மக்கள் அனைவரும் பெற்றிருந்தனர் எனக் கூறுவதற்கில்லை. புகைவேந்தர் படையெடுப்பால் பல ஊர்கள் பாழாவதும், ஆறலைகள்வர்களால் மேலும் பல அழிவுறுவதும் பழங்காலத் தமிழகத்தில் உண்டு. உள் நாடுகளில் உள்ள ஊர்களும் இவ்வாறு அழிவுறும் எனின்,