பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 உவமையாற் பெயர்பெற்ருேர்

' ஆடு.அமை புரையும் வனப்பின், பணைத்தோள்,

பேர்அமர்க் கண்ணி இருந்த ஊரே, நெடும் சேண் ஆர் இடையதுவே! நெஞ்சே! சாம்பட்ட செவ்விப் பைம்புனத்து ஒரேருழவன் போலப் பெருவிதுப்பு உற்றன்றால் ; கோகோ யானே.”

- (குறுந் : கடக.) உழவுத் தொழிலின் உயர்வை உணர்த்திப் புகழ்பெற்ற புலவர் ஒரேருழவனர், உலகியலை நன்கு உணர்ந்தவர் என் பது அவர் பாடிய மற்றொரு பாட்டால் நன்கு விளங்கு கிறது.

உலகவாழ்வு, இல்லறம் துறவறம் என இரண்டாக நடைபெறுவதே எனினும், பெரும்பாலான மக்களால் விரும்பி மேற்கொள்ளப்படுவது இல்லறமே ; இல்லறத்தே இருந்து வாழவே மக்கள் விரும்புகின்றனர்; துறவறம் மேற்கொள்வதாயினும், இல்லறத்தேயிருந்து பெருவாழ்வு வாழ்ந்த பின்னரே அதை மேற்கொள்ளுதல் வேண்டும் ; அதுவே இயற்கையோடியைந்த துறவுநெறியாம் என்று தமிழர்கள் உணர்ந்திருந்தனர்.

' காமம் சான்ற கடைக்கோட் காலே

எமம் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே.”

- (தொல். கற்பு: டுக}

எனத் தொல்காப்பியர் விதித்தலும் நோக்குக. இல் லறத்தே இருந்து ஆற்றவேண்டிய கடமைகளைக் கைவிட்டு விட்டுத் துறவறம் மேற்கொள்வது கடமை யுணர்ந்தார் செயலாகாது ; பலர்க்கும் பயன்பட வாழும் இல்லறத்தை விட்டுத் தன் ஒருவன் உயர்விற்கே உறுதுணைபுரியும் துறவறத்தை மேற்கொள்ளுதல் கூடாது; இதை உணர்ந்தே

வள்ளுவரும்,