பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கயமனர் - 37

சுட்டிர்வாய் நெடுவே ற் காளையொடு மடமா அரிவை போகிய சுரனே.” (குறுங் : 44

ஊரிலும் சேரியிலும் கின்று இவ்வாறு புலம்பிய செவிலி, மேலும் இவ்வாறு புலம்புவதாற் பயனில்லை; நடப்பன நடந்துவிட்டது; இனிமேல் நிகழக்கடவனவற்றை ஆய்ந்து மேற்கொள்வதே அறிவுடைமையாம் எனத் துணிக் தாள் புணர்ந்துடன் போகிய மகளையும், அவள் காதலனை யும் மீட்டுக்கொணர்ந்து மணஞ்செய்து மகிழ்ந்து மனே பறப்படுத்தலே மாண்புடைமையாம் என எண்ணி அவர் களைத் தேடிக்கொணரும் பணியினை மேற்கொண்டாள்; அவர்கள் சென்ற சுரநெறியில் நடக்கலாயினள்; வழியில் வருவாரை எல்லாம் அவர்கள்பற்றி வினவினுள்; தன் ஆற்ருமையால் ஆண்டு உறையும் மான் முதலாம் விலங்கு களிடத்தும், தன் மகள் நிலை எடுத்துக்கூறி, அவரைக் கண்டிரோ எனக் கேட்டுக்கொண்டே சென்ருள்.

எதிரே, தன் மகளே போலும் பெண்ணுெருத்தியும், அவள் காதலன்போன்ற ஒர் ஆண்மகனும் கூடி வருவாரைக் கண்டாள்; சேய்மைக்கண் வந்தவழி அவர்கள் தம்மவர் களே என எண்ணி மகிழ்ந்தாள்; ஆனல் அண்மைக்கண் கின்று கண்டவழி அவர்கள், அன்னால்லர் என அறிந் தாள்; மகிழ்ச்சி மறைந்தது; ஆனால், அவர்கள் இவ்வழியில் வருகின்றனர். ஆதலின், எதிரில் தன் மகளைக் கண்டிருப்பர், அவர்கள் வழியாகத் தன் மகள் உள்ள இடமும் கிலேயும் உணர்ந்துகொள்ளலாம் என உணர்ந்தாள்; அவ் ஆண் மகனே அணுகினள். மிகச்சேய இடத்தினின்றும் வரும் ஆண்மகனே! நின் அருகே கிற்கும் இவளேக் கண்டவுடனே, நேற்று இச்சுரவழியே ஏதிலான் ஒருவனுடன் புணர்ந்து போகிய என் மகள் வினேவு உண்டாயிற்று, கண்கள் நீர் கிறைந்தன; அவள் தந்தை ஊர் இது; அவளே ஈன்றெடுத்த வள் யான் ; சென்றவள் இவளேபோன்றிருப்பாள்; வழியில் அவளேக் கண்டிருப்பீராயின், அவள்பற்றி அறிந்தன

எல்லாம் உரைக்கவேண்டுகிறேன்; உங்களை அவள் தங்கை