பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்பொரு சிறுதுரையார் . 4锣

கின்றமையால் சிறிதுநேரம் அழியாது இருந்தன; நரை கல்லில் மோதியவழி, குமிழிகள் சிதறித் தனிகில உற்று விடும். ஆகலின் அந்துரைத்திரள் உருத்தெரியாமல் அழியலாயிற்று.

ஆற்றின் இத்தகு காட்சிகளைக் கண்டு வீடுதிரும்பிய

புலவர், கலைமகன் பிரிவுத்துயரால் வருந்தும் தன்னே நோக்கி ஆற்றியிருக்க வேண்டும் என அறிவுரை கூறும் தன் கோழிமீது சினம்கொண்ட தலைமகள் ஒருத்தி உரைக் கும் உரை அமைந்த அகத்தினைச் செய்யுள் ஒன்றைப் பாட எண்ணினர்; எண்ணினர் கண்முன் அவர் கண்ட ஆறும், ஆற்றில் ஓடிவரும் பெருருேம், அந்நீர் அடித்துக் கொணரும் நரைத்திரளும், அந் நுரைத்திரள்கள், ஆற் றின்கரையில் மோதி மோதி அழிந்து போவதும் வந்து கின்றன; அவர் பாடிய பாட்டினுள் அவையும் இடம் பெற்றுவிட்டன. - .

கல்வி, இபாருள், புகழ் இவற்றுள் ஒன்று குறித்துக் கணவன் வேறுநாடு சென்றுவிட்டான் ; சென்றகாலை, 'இன்ன காலத்தே மீண்டு வருவேன்' என அவன் குறித்துச் சென்ற காலமும் கடந்துவிட்டது; ஆனல் அவன் வந்திலன். அவன் மனைவியோ அவனைப் பிரிந்து வாழ்ந்தறியாப் பேரன்பினளாவள்; அவள் அவனேக் காணமாட்டாது கடுந்துயர் உற்ருள்; அவள் உள்ளத்துயர், உடல் உறுப்புக்கள் வழியாக உருவுகாட்டத் தொடங்கி விட்டது; நாட்கள் செல்லச் செல்ல அவள் உடல்நலம் சிறிதுசிறிதாகக் குன்றத் தொடங்கிவிட்டது; இங்கில மேலும் நீடித்தால் அவள் இறந்துபடுவது உறுதி; இக் நிலையினே அவள் உயிர்த்தோழி உணர்ந்தாள்; இவள் இவ்வாறு அவன் பிரிவையே எண்ணி எண்ணித் துயர் உமறுவளாயின், இவள் உடல்நலம் கெடுமே; உடல்நலக்கேடு உயிருக்கு நன்றன்றே என்ற கவலை அவளுக்கும் உண் டாயிற்று ; தலைமகளிடம் சென்ருள் ; அவர் பிரிந்து, விட்டமையால் உண்டாம்துயர் எத்துணைப் பெரிதாயினும்