பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 உவமையாற் பெயர்பெற்ருேர்

ஆதலின், அதைப் பெற்றுவந்த பின்னரே இன்பர் துய்க்கவேண்டும் என்று எண்ணுவோம் எனில், அதுவும் இயலாது; ஒருவர் வாழ்நாள் எப்போது உலந்துபோம் என்பதை எவரும் அறியார் இன்று இருப்போர் நாளை இருப்பர் என எண்ணுவதற்கில்லை; வாழும் நாள் கழிக் தாரை, அந்நாள் கழிந்தபின்னர் ஒரு நாழிகையும் வாழ விடான் கூற்றுவன்; பொருள் கருதிப் பிரிந்து சென்றவர் உயிரோடு மீள்வர் என்பதற்கோ, வந்து வீட்டுள் இருந் தாரை உயிரோடு காண்பர் என்பதற்கோ உறுதியில்லை; கிலேயற்றது இவ்வாழ்வு: கிலேயற்ற இவ் வாழ்க்கையினைப் பெற்ருேர், கிடைத்தற்கரிய, கழிந்தால் மீண்டும் பெறலாகா இளமைக்காலத்திலேயே நுகரவேண்டிய இன்பங்களை துகர்தல் வேண்டும் என்றே அறிவுடையோர் அனைவரும் எண்ணுவர்; உலகமே ஒன்று திரண்டு வந்தாலொத்த பெரும் பொருளே பெறுவதாயினும், அப்பொருள் கருதி அவ்விளமை இன்பம் அழியப் பிரிய எண்ணுர்; இவ்வாறெல் லாம், அவன் உள்ளம், இளமை, இன்பம், வாழ்நாள், பொருள் இவற்றின் இயல்புகளே எண்ணி எண்ணி, எதை யும் துணியமாட்டாது இாங்குவதாயிற்று

தன்னுற் காதலிக்கப்பட்டாள் ஒருத்தியின் வாய்நீர், காதலனுக்குச் சாவா மருந்தாம் அமிழ்தேபோல் இன்பம் தரும் என்ப; அங்கீரின் இன்பம், பாலும் தேனும் கலந்த கலவை நீரின் இன்பம் போன்றது என்றெல்லாம் காதலன் பாராட்டுவன். - *

{{ பாலொடு தேன்கலக் தற்றே பணிமொழி

வாலெயிறு ஊறிய நீர்.”

- - (திருக்குறள். ககஉக.) இப்போது நாம் கூறும் தலைமகன், தன் மனேவியின் வாய் ஊறும் நீரின் சுவைக்கு நிகரான சுவையுடைப் பொரு

ளாக வேறு ஒரு பொருளைக் கூறுகின்ருன்.

... ', இனிய சுவையுள்ள பொருள்களுள் தலையாயது கரும்பு மிக மிக இனியாரை உருவகமாக என் கரும்பே'