பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செம்புலப் பெயனிரார் 65 -

தாய் யார் என்பது அவளுக்குத் தெரியாது ; அவன் அவள் தந்தை யார் என்பதை அறியான் ; அவள், அவன் தந்தை யார் என்பதை அறியாள் ; அவளுர் அவனுக்குத் தெரி யாது ; அவனுார் அவளுக்குத் தெரியாது. வடகடல் இட்ட ஒரு நுகம் ஒரு துளை, தென்கடல் இட்ட ஒரு கழி சென்று கோத்தாற்போல' இருவரும் ஒரிடத்தே எதிர்ப் பட்டனர் ; சிலமும் ருேம் கலந்த கலவைபோல் இருவர் உள்ளமும் ஒன்று கலந்துவிட்டன.

இருவரும் சிறிதபொழுது கலந்து உரையாடி மகிழ்ந் தனர்; தலைவன் பிரிந்து விடுவானே ? நம் மகிழ்ச்சிக்குக் கேடு வந்துறுமோ என்ற அச்சம் அவளுக்கு உண்டா யிற்று ; அவள் உள்ளக்குறிப்பினே உணர்ந்துகொண்ட அவன், அவளுக்கு ஆறுதல் உண்டாக ' என் தாயும், கின் தாயும் இதற்குமுன் ஒருவரையொருவர் அறிந்தவரா? அல்லர் ; என் தந்தைக்கும், கின் தங்தைக்கும் இதற்குமுன் யாதேனும் உறவுண்டா இல்லை; நாம் இருவருந்தான்் இதற்குமுன் ஒருவரை ஒருவர் கண்டு பழகியதுண்டா ? இவ்வாறு நம் புறத்தொடர்பெல்லாம் எத்தகைய உறவும் இன்றிக் கிடக்கவும், நாம் இருவரும் ஒருவர்பால் ஒருவர் கொண்டுள்ள உண்மையான அன்பினேப்பெற்ற நம் உள் ளங்கள் இரண்டும், நல்ல மண்ணும் பெய்த தண்ணீரும் சேர்ந்து உண்டான கலவையே போல் ஒன்றுகலந்துவிட் டன; ஒன்றுபட்ட நம் உள்ளங்கள், இனிப்பிரியா; அவற். றைப் பிரிக்கவும் இயலாது; ஆதலின், பிரிந்து விடுவமோ? பிரிவு வந்து நேருமோ? என்று எண்ணி அஞ்சற்க” என்று கூறிஞன். * . .

'யாயும் ஞாயும் யாரா கியரோ ? -

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் : யானும் யுேம் எவ்வழி அறிதும் ? ;

செம்புலப் பெயல்நீர் போல . அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே.'

(குறுக், சC) உ. பெ.-5