பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிமகனர் 73

கொழும்பதிய குடிதேம்பிச் செழுங்கேளிர் நிழல்சோ, நெடுநகர் வீழ்ந்த கரிகுதிர்ப் பள்ளிக் குடுமிக் கூகை குராவொடு முரலக், கழுர்ே பொலிந்த கண்ணகன் பொய்கைக் களிறுமாய் செருந்தியொடு கண்பமன்று ஊர்கா, நல்லேர் நடந்த நசைசால் விளைவயல் பன்மயிர்ப் பிணவொடு கேழல் உகள, வாஅ ழாமையின் வழிதவக் கெட்டுப் பாழா யினநின் பகைவர் தேஎம்.”

(மதுரைக்காஞ்சி : கடுங் - எசு)

இவ்வாறு பகைவர் படைகளால் பாழான இடங்களின் கொடுமை, அழிந்துபோன விசயநகரப் பேரரசின் தலை நகராகிய ஹம்பியினையும், இரண்டாம் உலகப் பெரும் போரில் செர்மானியப்படையால் பெரும்பாழுற்ற இரஷ் யப் பெரு நகமாகிய ஸ்டாலின்கிராடு நகரையும் கண்டார்க்கு நனகு புலமை.

பொன்னும் பொருளும் கிறைந்து பொலிவு தோன்ற விளங்கிய பேரூர்களைப் பெண்மைநலத்தால் நிறைந்து சிறந்து விளங்கிய மகளிர்க்கு உவமைகொண்ட புலவர்கள், கணவரைப்பிரிந்து கவினிழந்து கிற்கும் மகளிர்க்குப் பாழுற்றுப் பலவளமும் இழந்து, குடிவாழ்வாரை அற்றுத் தம் பண்டைப்பொலிவு இழந்து கிடக்கும் பேரூர்களை

உவமையாகக்கொள்வதையும் மரபாகக் கொண்டுள்ளனர்.

புலவர் தனிமகனுர், அத்தகைய பாழுர் ஒன்றையும், வாழ்வாரை இழந்து வெற்றிடமாகக் கிடக்கும் அப்பாழ் நிலத்தை இரவு பகலாகத் தனியே காத்துக்கிடக்கும் காவலன் ஒருவனையும் கண்டார்; அவ்விடத்தின் கொடுங் காட்சிகளும், அக்காவலனின் அவலநிலையும் அவர் உள்ளத் தைத் தொட்டன , அழகிய ஒரு பாட்டில், தம் உள்ளத் துயரை உணர்த்துவாராய், அக்காலமகளிர்களின் மாண் புடைய உள்ளத்தின் உயர்வை உணர்த்திச் சென்றுள்ளார்.