பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 உவமையாற் பெயர்பெற்ருேர்

தலைவன்பால் கொண்ட காதலாலும், கற்பின் சிறப் புணர்ந்த காரணத்தாலும், நானும் கிறையும் முதலாம் பெண்மைக்குணங்களே எல்லாம் இழந்து கிற்கிருள் தலைவி; நாண் அகத்தில்லா அவள் உடல், உயிரற்ற பாவை போன்ருகிவிட்டது ; சுருங்கக் கூறினல், அவள் நடைப் பிணம் ஆயினுள்; அங்கிலையில் அவளுக்குத் துணையாய் இருந்தது அவள் உள்ளம் ஒன்றே ; அதுவும் அவள்பால் நில்லாத அவனிருக்கும் இடம் தேடிச் சென்றுவிட்டது; அஃதாவது, அது, அவன் கினேவாகவே ஆகிவிட்டது.

' கெட்டார்க்கு நட்டார் இல் ” என்ப. அதைப் போல, பெண்மைக் குணங்களே எல்லாம் இழந்து கிற்கும் தன்னைத் தன்னெஞ்சும் கைவிட்டுச் சென்றமை கழி பெரும் துன்பத்தைத் தந்தது. எல்லாம் ஒழியத் தனித்து நின்ற உடலே ஒம்பியிருக்கும் கிலேயினே எண்ணினுள்; துயர் எல்லே கடந்தது. நான் ஏனே உயிர் வாழ்கிறேன் ? இந்த நிலையிலும் உயிர் வாழவேண்டியுளதே ! இந்த உடலும் அழிந்தால் இங்கிலை எனக்கிநாதன்றே எல்லாம் ஒழிந்த பின்னரும், இந்த உடல் மட்டும் ஏனே ஒழியாத உளது ? அஃது இருப்பதாலன்ருே அதைக் காக்கவேண்டி நான் வாழ வேண்டியுளது? அந்தோ என் உடலே! நீ அழியாயா ? எல்லாம் அழியவும் அழியாது கிடக்கும் இப்பாழ் உடலைத் தனியே காத்துகிற்கும் என் உயிரே! நின் நிலைகண்டு வருந்துகின்றேன்,” என்றுகூறி வருந்துகிருள்.

இவ்வாறு காதற் சிறப்பால், நானும் நிறையும் முதலாம் பெண்மைக்குணங்களை இழந்து, நெஞ்சுத் துணையும் பெருது தனித்துயருற்றுவாடும் தலைமகள் ஒருத்தியின் கிலேக்கு, வாழ்வோரெல்லாம் ஒடிப்போமாறு முழுதும் பாழுற்ற ஒர் இடத்தைக் காத்து கிற்கும் தனி மகன் ஒருவனே உவமை கூறித் தனிமகனுர் என்ற தனிச் சிறப்பைப் பெற்றுவிட்டார் நம்புலவர் பெருந்தகையார்.

' குணகடல் முகந்து, குடக்கேர்பு இருளி,

மண்திணி ஞாலம் விளங்கக், கம்மியர்