பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 க பி ல ர் கொண்டு, அவை, அக் குறளாசிரியர் வள்ளுவனரின் தாய் தந்தையரைக் குறிக்கின்றன எனக்கொண்டோர் கற்பனையை அடிப்படையாகக் கொண்டே இக் கதைகள் எல்லாம் தோன்றியிருத்தல் வேண்டும். இனி, கபிலர் வரலாறு உரைக்கும் நூல்களுள் கபில ாகவல் என்பதும் ஒன்று: அந் நூலை இயற்றியவர் கபிலரே ஆதலின் அவர் கூறும் வரலாற்றினையும் ஆதாரமற்றது எனத் தள்ளுதல் அறிவுடைமையாகுமோ என எண்ணுவர் சிலர். சங்க நூல்களால் அறியப்படும் நம் கபிலர், பார்ப் பார்க் கல்லது பணிபறியலை,” “அந்தணன் புலவன்’ என்று பாடிப் பார்ப்பனர் குலத்தை மதித்துப் பாராட்டியுள்ளார்; ஆனல், கபிலரகவல், பார்ப்பனர் பிறப்பால் உயர்ந்தவர் என்ற கொள்கையினே வன்மையாகக் கண்டிக்கிறது. சங்க காலத்துப் பாட்டுக்களில் இடம்பெருக, பல வட சொற்கள், கபிலரகவல் என்ற சிறு நூலில் இடம் பெற்றுள்ளன; கபிலாகவல் என்ற நூல், சொல் அமைப்பு முறைகளாலும், சங்க காலத்திற்கு மிக மிகப் பிற்பட்ட காலத்தது என்று அறிவிக்கின்றது. கபிலரகவல், கபிலரால் இயற்றப்பட்டது என்பதற் குப் பத்தி கிரியார் இயற்றிய . மெய்ஞ்ஞானப் புலம்பல் என்ற நூல் தவிர, வேறு புறச்சான்றுகளோ, அகச் சான்றுகளோ கிடைத்தில. ஆகவே, கபிலாகவல், பிறப் பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற குறளுரையை அடிப் படையாகக் கொண்டு, மக்கட் பிறப்பில் காணப்படும் சா வேறுபாடுகளைக் காண்பித்து ஒழிக்க விரும்பிய உள்ள முடைய பிற்காலப் புலவர் ஒருவர் இயற்றியதே அன்றி, சங்கப்புலவராய கபிலர் இயற்றியதன்று. ஆகவே, ترتے {اقے[ கூறும் வரலாறும் ஏற்றுக்கொள்ளத் தக்கதன்று. -