பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 க பி ல ர் நிறைந்தது என்பதை அவர் முன்னரே அறிவார் ; அவர் மலையமானேடு வாழ்ந்த காலத்தில், அவ் வந்தணருள் சிலரை அவர் அறிந்திருத்தலும் கூடும். ஆகவே, பாரி மகளிரை அழைத்துக்கொண்டு திருக்கோவலூர் சென்று, ஆங்கே தமக்குத் தெரிந்த பார்ப்பார் சிலரிடத்தில் அவர் அருமை பெருமை கூறி அன்புடன் ஒம்புக !’ என்று ஒப்படைத்து, ' விரைவில் மீண்டுவருவேன்; அதுவரை ஆற்றியிருங்கள்,” என்று அம் மகளிர்க்கும் ஆறுதல் கூறி வந்தார். கபிலர், அன்றுவரையிலும், பாரி பறம்பு என்று எண்ணியிருந்தாராதலின், பெருஞ் சுற்றம் ஒன்று தம் பின்னிருப்பதையே மறந்தார். அவர்களும், அவர் துயர் அறிவார் ஆதலின், தங்கள் வறுமை கிலே குறித்து அவர் பால் வாய்கிறவாாாயினர். ஆனல், அவர்கள் வறுமையின் கொடுமை, அவர்களே மேலும் அடங்கியிருக்கவிடவில்லை. எவ்வளவோ பொறுத்தும் பார்த்தனர்; இயலவில்லை. இறுதியில், பாரி மகளிரைப் பார்ப்பார்பால் ஒப்படைத்து அவருக்கேற்ற கண்வரைத் தேடிப் புறப்படும்போது, அவர் முன் சென்று நின்றனர். வந்து கின்ருேர் உடல் கில்ே கண்டே, கபிலர் அவர் உள்ளக் கருத்தை உணர்ந்துகொண் டார் ; பாரிமகளிர்க்கு மணம்முடித்த பின்னர் ஒரு நாளும் அவர் உயிர்வாழ விரும்பவில்லை; ஆகவே, அவர் மணத்திற்குப்பின், இவர்க்கு வேண்டுவன பெற்றுத் தந்து பின்னர் விடைபெறுதல் இயலாது என்பதை உணர்ந்தார்; அவர் எவ்வாருயினும் ஆகுக என்று, அறவே மறந்துவிடுத லும் அறிவுடையோர் செயலன்று ; ஆகவே, பாரிமகளிர் மணமுயற்சிக்குமுன், இவர்க்கு வேண்டும் பணமுயற்சி யினை மேற்கொள்ளுதல் வேண்டும் என்று எண்ணினர்.