பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 க பி ல ர் மாறித் தோன்றுவதாயிற்று. அவனேடு தான் கொண் டுள்ள இவ்வுறவு, தன் உயிர்க்கோழிக்குத் தெரியாது என்பது அவள் எண்ணம்; மறுநாள் தினேப்புனத்துக்கு வந்த அவள், தினேக்கதிர்களைக் கவர்ந்து செல்லும் கிளிகளை யும் ஒட்டாமல் எதையோ எண்ணி ஏங்கியிருப்பாளாயினள்; தோழி இதையெல்லாம் உணர்ந்தாள் ; தலைமகளே தன் களவொழுக்கத்தை உணர்த்துவாள் என எண்ணினுள் ; அவள் உணர்த்தவில்லை; ஏன் இந்த மாறுபாடு !’ என்று இவள் கேட்டபோதும், அவள் உண்மை உணர்த்தாது, ஏதோ சில காரணம் கற்பித்துக் கூறிவிட்டாள் ; தோழிக் குச் சிறிது கோபம் உண்டாயிற்று; நம்மையும் ஏமாற்ற எண்ணுகின்றனளே என எண்ணினுள்; அவளுக்கு அறிவு வரச்செய்ய வேண்டும் என்று விரும்பினுள் ; அவள் பால் சென்ருள் ; அவள் கண்கள் சிவந்து இருப்பதைக் கண்டாள் ; ' தினையைக் காவல்புரிவோர், அத் தினையைத் தின்னவரும் பன்றி முதலாகிய விலங்குகளைக் குத்திக் கொன்று ஏந்திய அவ் விலங்குகளின் இரத்தக்கறை படிந்து சிவந்து காணப்படுவதேபோல் செவ்வரி பரந்து சிவந்து காணப்படும் கின்கண்களின் அழகே அழகு!’ என்று அவ ளேப் பாராட்டினள். பின்னர் அவளே அழைத்து, கிளிகள் தினேக்கதிர்களைக் கவர்ந்து செல்கின்ற அவ்வழகையும் பார் ; அவை அவ்வாறு கவர்ந்து செல்வதை, மலைக் கூடு களில் தங்கியிருக்கும் மயில்கள் பார்த்துக்கொண்டிருப் பதையும்காண் ; தாம் தினேக்கதிர்களைக் கவர்ந்து செல்வது அம் மயில்களுக்குத் தெரியாது என எண்ணி ஏமாறும் அக் கிளிகளின் அறியாமையினே என்னென்பது ' என்று கூறி கைப்பாளாயினுள். எனல் காவலர் மாவீழ்த்துப் பறித்த பகழி அன்ன சேயரி மழைக்கண் நல்ல பெருந்தோளோயே 1. ஒங்கு மலேக் கட்சி மயில் அறிபு அறியா மன்னே, - பயில்குரல் கவரும் பைம்புறக் கிளியே ?! (நற் : கங்)