பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலர் குணநலம் 63 பெறவேண்டும் என்ற அதன் ஆசை, தனக்கு ஊறு செய்வார் யாரேனும் அருகில் இருப்ப்ரே என்ற அச்சத்தை ஒழித்து விட்டதைக் கண்டேன்; அன்பு காட்டிய தலைவன்பால் நான் கொண்ட அன்பு, பின்விளைவுகளே எண்ண மறுத்துவிட்டது. ஆகவே தவறு என்னுடைய தன்று ; அக் காரையினுடையதே ’ என்று குறிப்பால் கூறிச் செய்த தவறினின்றும் கப்பித்துக்கொள்ள முயலும் தலைமகள் அறிவினை என்னென்பது ! தலைவி தலைவன் இருவரும் அன்புகொண்டு வாழ் கிருர்கள் ; ஒருவர் இன்றி ஒருவர் வாழமாட்டாப் பெருங் காதலுடையாகவும் காணப்படுகிருர்கள். எனினும், அவர் களால் களவொழுக்க வாழ்விலே கலந்து மகிழ முடிய வில்லை; அதற்கு எத்தனையோ இடையூறுகள் ; ஒருவரை பொருவர் காண்ப்தம் அரிதாகிறது; இதல்ை, தலைவியின் வருத்தம் மிகுகிறது; அவள் உள்ளக் கவலை பிறர்க்குப் புலனுகுமாறு அவள் உடல்நலனும் கெடுகிறது : இங்கிலே மேலும் நீட்டித்தால், தலைவி இறந்துவிடுவளோ எனவும் தோழி அஞ்சினள். மணந்து கொண்டால் மனக் கவ லேக்கு இடமில்லாமற் போகும் என்று முடிவு கொண்டாள்; தலைவனே அடைந்த மனத்தின் இன்றியமையாமையினை எடுத்துக் கூற விரும்புகிருள் ; அவர்கள் கின்று பேசிக் கொண்டிருக்கும் இடத்திற்கு முன்னே ஒரு பலாமாம் ; பாதுகாப்பற்றது ; அதன் சிறிய கிளே ஒன்றில், பெரிய பழம் ஒன்று பழுத்துத் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதைக் கோழி கண்டாள் ; தலைவன் நாட்டில் வேர்ப் பலா மரங்கள் மட்டுமே கிறைந்திருப்பதையும், அம் மாங் களேச் சூழ மூங்கிற் புகர்கள் வேலியாக அமைந்திருப்பதை யும் அவள் அறிவாள். ஆகவே, அவள் அவனே நோக்கித், தலைவ! உங்கள் ஊரில் உள்ள வேர்ப்பலா மரங்களைச் சூழ மூங்கில் வேலி அமைந்துளது ; ஆகவே, பிறர் எவரும் எளிதில் அப் பலா மாங்களே அடைதல் இயலாது ; மேலும் அம் மாங்கள் எல்லாம் வேர்ப்பலா ; பழங்கள் பழுத்தாலும் வேரிலேயே