பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைபாடிய பெருங்கடுங்கோ 25 இடம் பெற்றுள்ளன. இப்போது தமிழகம் அறிய உள்ள அவர் பாடல்கள் அறுபத்தேழு அவற்றுள் ஒன்றுமட்டுமே புறத்திணை தழுவியது . ஏனய அறுபத்தாறும் அகப் பொருள் தழுவியனவே ; அகப்பொருட் பாடல்கள் அறுபத் தாறில், குறிஞ்சிப்பொருளில் ஒன்றும், மருதப்பொருளில் ஒன்றும் இடம்பெற எஞ்சிய பாடல்கள் அறுபத்து நான் கும் பாலேப்பொருள் பற்றியே வந்துள்ளன ; பாலே நிகழ்ச்சி, களவு, கற்பு ஆகிய இரு நிலையிலும் உண்டாம்; பால்ப் பொருள் குறித்த பாடல்கள் அறுபத்து நான்கில், ஆது பாடல்கள் களவுக்காலத்துப் பாலேப்பொருளிலும், ஏனேய பாடல்கள் கற்புக்காலத்துப் பாலேப்பொருளிலும் வக் அதுளளன. களவுக்காலத்தில் களவொழுக்கம் மேற்கொண் டொழுகும் தலைமகளே அவள் விரும்பும் ஆண்மகனுக்குத் கர அவள் பெற்ருேர் மறுத்து வேறு ஒருவ்னுக்கு மனம் செய்துதர முயன்றவழி, அவள் காதல் வாழவேண்டு மாயின், அவள் கற்பு நிற்கவேண்டுமாயின், அவள் அவைேடு அவனுார்சென்று மணத்தல்வேண்டும் எனத் அதுணிந்த தோழி, உடன்போக்கிற்கு இருவரையும் இசை வித்தலும், இருவரையும் ஒன்றுகூட்டி யனுப்புதலும், பாலேவழியே அவர்கள் செல்வதும், வழியில் வருவார் அவரைக் கண்டு பாராட்டலும், சென்றவர்களே கினேத்து தாய் வருந்தலும், செவிலி பாலே வழியில் தேடிச்செல்வதும், எதிர்ப்பட்ட அறிஞர் உலகியல் கூறி அவளைத் தெளிவித்த லும் ஆய நிகழ்ச்சிகள் களவுப்பாலேப் பொருள்களாம். தலைவி தலைவன்பால்கொண்டுள்ள அன்பு, அவனே இன்றி வாழமாட்டா அவள் கிலேமை, அவள் களவொழுக்கம் கண்டு இற்செறித்துத் துயர்செய்யும் தலைமகள் சுற்றத்தார், ஆகியன கூறித் தலைமகளைக் கொண்டுசென்று மணந்து கொள்வதே செய்யக்கடவது என்று தலைமகனுக்கு எடுத் அக்காட்டி அவன் ஒப்புதலைப் பெற்ற தோழி, தலைவிப்ால் சென்று, தோழி 1 கின் களவொழுக்கம் கண்டு ஊராரும் உறவினரும் கூறும் அலர்ச்சொல் நாணி, இற்செறித்துக்