பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 ந க் .ே ர்

போன்ற வாயில்களையும், கவரிமான் ஏறுகளும் அன்னப் புட்களும் தாவித் திரியும் முன் வாசலையும், புது மணல் பரந்த முற்றத்தையும், திருமகள் தங்கிய சிறப்பினையும் உடைய குதிரைகள் புல் உணவைக் குதட்டுங்கால் எழும் ஒலியும், அரசன் கிலாப் பயன் துய்க்கும் கிலா முற்றத்தில் உள்ள அருவிநீர் விழும் ஒலியும், ஆங்கே அசைந்து இயலும் மயில்கள் எழுப்பும் இன்னேசையும் கூடி, மலே களில் எழும் ஒசைபோல் ஒலிவிடும் கோயிலின் பெருமை யும் சிறப்பும் மிக்க பாண்டியன் அல்லது பிற ஆடவர் எவரும் அனுகலாகா அரிய காவலை உடைய கட்டுக் களின், நீலமணியினைக் கடைந்தெடுத்தாற்போன்ற கரிய திண்ணிய தூண்களே உடையவாய், செம்பிற்ை செய்தாற் போன்ற சித்திர வேலைகள் கிறைந்த நெடிய சுவரில் வெள்ளிய சாங்தைப் பூசி, பல இடங்களிலும் அழகிய பல பூக்களைக் கொண்ட ஒரு கொடியை எழுதி, மலைகளைக் கண்டாற் போன்ற உயர்ச்சியை உடையவாய், மலைகளைச் சார்ந்து வான வில் கிடந்தாற் போன்ற பல கொடிகளை உடையவாய், இருள் நீங்குமாறு யவனர் செய்து தந்த பாவைவிளக்கிலே கெய் வார்த்துப் பெரிய கிரியிட்டு ஏற்றிய சுடரை நெய் வற்றுக்தோறும் வார்த்தும் ஒளி மழுங்குந்தோறும் தூண்டியும் காட்சிக் கினிமை உடைய வாய்த் தோன்றும் நல்ல இல்லில்,

நாற்பது ஆண்டிற்கு மேற்பட்டுத் தான்ே வீழ்ந்த யானைத் தந்தங்களேக்கொண்டு சிற்பம் பல அமைத்துச் செய்த வட்டக் கட்டிலேச் குழ, முத்து வடம் நாற்றி, கட்டிலின்மீது மெல்லிய படுக்கை விரித்து, அதன் மீது அன்னச் சேவலின் மயிர்களைப் பாப்பி, அதன் மீது அனேகளே அமைத்து, அவற்றின்மீது மாசு போகக் கழுவி, கஞ்சியிடப்பெற்ற தூய ஆடைகளே மடித்துப் போட்டு, அதன் மீது மலர் இதழ்களைத் தூவிச் செய்த படுக்கைமீது அரசன் பிரிந்து சென்றுளான் ஆதலின், அவனில்லாக் காலத்தில் ஒப்பனைசெய்து கொள்ளுதல் உயர்குல மகளிர்க்கு மாண்பன்று என்னும் எண்ணமுடையளாய்,