பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102. ಹ ಹ ಡಿ 5 #

களும் உணர்ந்திருந்தனர் ; காளைமாடுகளைப் பேணி வளர்த்தனர்; அதற்காகவே காளை விடு விழா, ஏறு தழுவுதல் போன்ற விழாக்களையும் மேற்கொண்டனர்; அவர்களின் இப் பண்பின் விளைவாகவே சிற்றார் தோறும் இன்றும் காளே மாடுகள், கோயில் மாடுகள் பெருமாள் மாடுகள்’ என்ற பெயர்களில் ஊர்மக்களால் வளர்க்கப்பட்டு வருகின்றன ; இந்த உண்மை அறிந்தவர் தமிழர் ஆக லின், மந்தைகள் தோறும், காளைமாடுகளைக் கொண்டு சென்றனர்; அதனே நன்கு உணர்ந்து " ஏறுகளை உடைய ஆனிரைகள் ” என்று கூறிய நக்கீரனுர்தம் துண் மாண் அழைபுலம் நம்மால் அறிந்து மகிழத்தக்க மாண்புடைய தாமன்ருே !