பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறப்பு, குலம், சமயம் 7

ஆகவே, அவர் தாம் விரும்பி வழிபடு கடவுளாக முருகனே மேற்கொண்டார்; அவன்பால் கொண் ட அன்பின் பெருக்கால், தம் புலமை நலமெல்லாம் தோன்றி விளங்கும் திருமுருகாற்றுப்படை பாடிப் பரவியுள்ளார் ; திருமுருகாற்றுப்படை, சங்ககாலத் தமிழர்களிடையே நிலவிய சமயகிலேயினேத் தெள்ளத் தெளிய எடுத்துக் காட்டும் இயல்புடையது ; நக்கீசர், முருகனை வழிபடு கடவுளாகக் கொண்டு வாழ்ந்தவரே எனினும், பிறசமய வெறுப்பாளர் அல்லா ; இஃது, அவர் இயற்றிய ஆற்றுப் படையில் பிறகடவுளரைப் போற்றிப் புகழ்வதாலும், பாண்டியன் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாற்சீனப் பாடிய பாட்டில், சீற்றத்தில் சிவனேயும், வலியில் வாலி யோனேயும், புகழில் மாயோனேயும், முன்னியது முடித்த லில் முருகனையும் ஒத்தவன் என்று கூறிச் சிவன், பலதேவன், திருமால், முருகன் ஆகியோரைப் பாராட்டி யிருப்பதாலும் தெளிவாகும். நக்கீசர் சமயம் இஃது என் பதை, இத்தகைய அவர் பாடல்களாகிய அகச்சான்று களே அல்லாமல், நம்பியாண்டார்ாம்பி இயற்றிய திருத் தொண்டர் கிருவந்தாதியும், அவர் வரலாறு குறித்து வழங்கும் பிறபுராணங்களும் விளங்கக் கூறியுள்ளன.