பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குணநலம் 21

எனச் சோனேயும், அவன் கருஆசையும், ஆன்பொருகை ஆற்றையும் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளார். இவ்வாறு ஒரே பாட்டில் மூவரையும் பாராட்டும் பண்பினராகிய நக்கீரர்பால், பாண்டியனத் தவிரப் பிறர் எவரையும் பாடாப் பிழையுண்டு எனல் எவ்வாறு பொருந்தும் ?

கூறிய குணங்கள் எல்லாவற்றிலும் நக்கீசர்பால் அமைந் துள்ள இயற்கைக் காட்சிகளைக் கண்டு மகிழும் உணர்வு பெரிதும் பாராட்டற்குரியதாம். இயற்கைக் காட்சிகளே ஆழ்ந்துணரும் அவர் அறிவின் பயனுலன்ருே, முருகனே நீலக்கடல் மீதெழும் செஞ்ஞாயிறு எனக்கூறி மகிழ்வாரா யினர்; நீலக்கடல் மீது எழும் செஞ்ஞாயிற்றுக் காட்சி யினைக் கண்டு மகிழ்ந்தார்க்கு அல்லால் அக் காட்சியைக் கோலக்கலாப மயில்மீது அமரும் குமானுக்கு உவமை கூறல் இயலாதன்ருே நக்கீரர் பாக்களில் வரும் ஒவ்வொரு தொடரும் அவர்தம் இயற்கையுணர் அறிவைப் புலப் படுத்தும் இயல்பினவே எனினும், திருமுருகாற்றுப் படையில் இறுதி அடிகள் குறிக்கும் அருவிவீழ்ச்சியின் அழகும், நெடுநல்வாடையின் முதல் அடிகள் சில குறிக்கும் கூதிர்காலக் கொடுமையும் அவர்தம் அப் பண்பிற்குச் சாலச் சிறந்த எடுத்துக்காட்டுக்களாம். -

மிக உயர்ந்த மலை உச்சியினின்றும் அருவிவிழுகிறது; சேய்மைக்கண்கின்று நோக்குவார்க்கு அவ் அருவி, வானத்திடத்தே பறக்கும் பல்வேறு துணிக்கொடிகளைப் போலத்தோன்றுகிறது; அருவி ஓடிவருகிறது; வழி யில், அகில அடித்துக்கொண்டுவருகிறது; பெரிய சந்தன மரத்தைச் சாய்த்துவருகிறது; சிறுமூங்கில்கள் அலையு மாறு அவற்றின் வேரைப் பிளந்துவருகிறது; அருவி ஓடி வரும் வேகத்தால், உயர்ந்த மலையிடத்தே ஈக்கள் ம்ொய்க்க இருந்த தேனடை உடைந்து கெடுகிறது; ஆசினிப் பலாப்பழங்கள் சிதைந்து அவற்றின் சுளைகள் அருவியில் சிதறுகின்றன; மலையுச்சியில் உள்ள சுரபுன்னேயின் மலர்கள் உதிர்கின்றன; ஆசினியையும் புன்னேயையும் இருப்பிட

மாகக்கொண்டு வாழும் முசுக்கலைகள் கடுங்குகின்றன . , - * . . . 鬱