பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீசர் பாராட்டிய அரசர்கள் 41

வேங்கட மலைக்கு வடக்கே வாழும் வடுகர் தலைவனும், பகைவரை வென்று அவர்கள் நாட்டுப் பசுகிரைகளைத் தந்து தன் மன்று நிறையுமாறு நிறுத்த வல்லவனும், தனக்கு நிகரான வலியுடையார் எவரையும் பெறமாட்டாப் பெருங்கோள் பெற்றவனும் ஆகிய எருமை என்பானேயும், அவனுடைய காட்டில் பாயும் அயிரி என்னும் ஆற்றினேயும் அறிந்து கூறியுள்ளார்; வடுகர் பெருமானுகிய இவ் எருமை என்பானையே அன்றி நெடுஞ்செழியனேடு தலையாலங் கானத்துச் செருவில் போரிட்ட எருமையூரன் என்பான் ஒருவனேயும் நக்கீரர் அறிந்துள்ளார் ; இருவரும் ஒருவரோ, அன்றி வேறுபட்டவரோ அறிகிலம் : -

' கன்றுடைப் பெருநிரை மன்று சிறை தரூஉம்

நோா வன்தோள் வடுகர் பெருமகன் பேரிசை எருமை என்னுட் டுள்ளதை அயிரியாறு.'

(அகம், உடுக.) நாாரி நறவின் எருமை யூான். (அகம். கட்சு)

வாட்போர் வல்லவனும், தமிழ்நாடு முழுதினையும் வென்று பெற்ற புகழுடையாலும், தன்சீனப் பாடி வரும் பாணர் முதலியோர்க்கு வரையாது வழங்கும் நாளோலக்கச் சிறப்புடையவனும், துரங்கலோரியார் என்ற புலவர் பெருங் தகையின் பாராட்டைப் பெற்ற சிறப்புடையவனும், போரில் பெண்யானையால் மிதியுண்டு பெற்ற புண் தழும்பு, பெரிய வழு துணங்காய் அளவு பெரிதாதல் கண்டு மக்கள் இட்டு வழங்கிய வழுதுணேத்தழும்பன் என்ற பெயருடைய வலும் ஆகிய தழும்பனேயும் அவனுடைய காவல் செறிந்த ஊனுரரையும், அவ் ஆனூர்க்கு அப்பால் உள்ள பெருஞ் செல்வம் உடைமையர்ல் பெரும் புகழ்பெற்ற உப்பங்கழி களால் சூழப்பெற்ற மருங்கூர்ப் பட்டினத்தையும் நக்கீசர் அறிந்து பாராட்டியுள்ளார்: -

' வாய்வாள்,

தமிழகப் படுத்த இமிழிசை முரசின் வருநர் வாையாப் பெருநா விருக்கைத் தாங்கல் பாடிய ஒங்குபெரு நல்லிசைப்