பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 ந க் ோர்

வேனிற் காலம் வந்துற்றது; இளந்தளிர் விட்டு எழில் மிக விளங்கும் மரங்களேயும், மலரிடைப் புகுந்து மணங் கொண்டு வீசும் தென்றலையும், கண்டும் உற்றும் களி கொள்ள விரும்பிய வங்கியசூடாமணி, தன் மனைவியோடும் மலர் வனம் புகுந்து ஆண்டுள்ளதோர் செய்குன்றின் மேல் இருந்து இயற்கையின் எழில் கண்டு மகிழ்ந்திருந்தான்் ; அக்காலே, தென்றல் பண்டுபோல் கமழாது புதுமணம் கமழ்தலை உணர்ந்தான்்; என்றும் இல்லா இம்மணம், தென் றற்கு இன்று எவ்வாறு கிடைத்தது இம் மணந்தரும் பொருள் யாது என்று எண்ணி எண்ணிப் பார்ப்பான யினன்; உற்று நோக்கி வருவான் முன், அதே நறுமணம் தன் மனைவியின் கூந்தலினின்றும் வருவதை உணர்ந்தான்்; அறிதோறறியாமை காண்டலே போல், தன் மனைவியின் கரு நெறிக் கூந்தலினின்று கமழ்கிறது எனின், இம்மணம் இவள் கூந்தற்கு இயல்பாயமைந்ததோ அன்றி மலரும் மண முடைப் பொருளும் பெற்றுச் செயற்கையானமைந்ததோ என்று ஐயுறலாயினன்; ஐயத்தைத் தன் அறிவால் தெளிந்து கொள்ளமாட்டா வங்கிய சூடாமணி, ‘என் உளத்துள தாய இவ் ஐயத்தை உணர்ந்து செய்யுள் செய்ய வல் லார்பெறுக ஆயிரம் பொன்,' என அறிவித்து, அப்பொன் முடிந்த கிழியைச் சங்க மண்டப முன்னர்த் தாக்கினன். புலவர்கள் அரசன் ஐயம் யாதாம் என எண்ணி எண்ணிப் பார்த்தும் அஃது அறியமாட்டாராயினர்; அது குறித்து அவர்கள் பாடிய பாட்டொன்றும், அரசன் உட்கருத்து ணர்த்தும் ஆற்றலைப் பெருமை புணர்ந்து புலவர்கள் பெரி தும் உளங் கவல்வராயினர்.

இஃது இவ்வாருக, ஆதிசைவ மரபிற்ருேன்றி இளம் பருவத்திலேயே இருமுதுகுரவரையும் இழந்து, பிரமசரியம் மேற்கொண்ட தருமி என்னும் அந்தணச் சிறுவன்ஒருவன்,

ஆலவாய்ப் பெருமான் அடிமுன் வீழ்ந்து, எங்தையே! அடியேன் தந்தையையும் தாயையும் இளமையிலேயே

இழந்தவன்; எவர்துணையும் இன்றி இன்றுவரை துயர். வாழ்வுடையேன் ; அதனல், மணம் செய்துகொள்ளும் மன.