பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீரரைப்பற்றிக் கூறும் கதைகள் 53

வாறு துணிந்த அவன், தான்் கருதிய இதனை அமைத்துச் செய்யுள் செய்ய வல்லார்க்கு ஆயிரம் பொன் அளிப்பேன் என்று கூறி, ஆயிரம் பொன்னேயும் கிழியொன்றில் முடிந்து சங்க மண்டபத்தின்முன் தொங்கவிட்டான். புலவர் பலரும் பொன்னேப்பெற வேண்டிப் பாடல் பாடி னர்; ஆனால், அவர் பாக்கள், தம் மனத்தின் கருத்தினைக் கொண்டிராமை கண்டு அாசன் அவற்றை மறுத்து விட்டான்; பொற்கிழி பெர்வரை இன்றிக் கிடந்தது.

இங்கிலையில் பாண்டிநாட்டில் பெரும் பஞ்சம் வந்துற் றது. மதுரை வாழ்மக்கள் வாழ்விடம்தேடி வேறு நாடு செல்வாராயினர்; அப்போது ஆலவாய்ப்பெருமானப் பூசித்து அருச்சிக்கும் தருமி எனும் அந்தணன், இனியும் இங்கிருப்பின் நாம் உயிர் பிழைத்தல் அரிது; ஆகவே, செல்வமலிந்த நாடு நோக்கிச் செல்வதே செய்ய வேண்டு வது எனத் துணிந்து, இறைவன்பால் விடைபெறச் சென்று, பெருமானே! பஞ்சத்தால் பிழைக்கும் வழி யறியேன்; மேலும் இங்கு இருப்பின் சாவேன்; ஆதலின் இப்பஞ்சம் போம்வரை, பிறநாடு புகுந்து வாழ்ந்து பின் னர் வருவேன்; வந்து கின்திருவடி தொழுவேன்; வாழ்த்தி வழியனுப்புக” என்று வேண்டினன். அடி வணங்கும் அவன் துயர் உணர்ந்த ஆண்டவன், பொரு ளின்றிப் பிறநாடு செல்லும் நின் எண்ணத்தை விட் டொழிக! மனத்தடக்கிய பொருள் தோன்றப் பாட வல் லார்க்கு வழுதி ஆயிரம்பொன் அளிக்கத் துணிந்துளான். அவன்பால் இச் செய்யுளேக் காட்டி அப்பொருள் பெற்று வாழ்க’ என்று கூறி, கொங்குதேர் வாழ்க்கை” என் லும் செய்யுள் அமைந்த எட்டினே அந்தணன் கைக் கொடுத்தார். • - - தருமி, பாண்டியன் முன் சென்று பாட்டைப் பாடி கின்ருன்; பாண்டியன், பாட்டின் பொருள் தன் உள்ளக் கருத்தினே உணர்த்துவதறிந்து மகிழ்ந்து நன்று நன்று இச்செய்யுள்' எனப் பாராட்டி, புலவர்கம் பாராட்டை யும் பெற்றுவருக என அனுப்பினன். தருமி, தமிழ்ப்