பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீசரைப்பற்றிக் கூறும் கதைகள் ä7

மக்களில் செழியனேயு மன்றிப் பிறரொருவரையும் பாடுவ தில்ல்ை என்னும் உறுதி உடையாராவர்; நக்கீரர் பாராட் டைப் பெறப் பெரிதும் விரும்பிய முருகன், அவர் உறுதிப் பாட்டின உணர்வோதைலின், அவரை அச்சுறுத்தித் தன் எண்ணத்தை ஈடேற்றிக் கொள்ளத் துணிந்தான்். உடனே, தன் பால் உள்ள அண்டாபாணன் என்பானே விளித்து, ' சரவணப் பொய்கையில் நீராடவரும் நக்கீரரை யாதேனும் குறை கற்பித்து நமது மலையிற் சிறை செய்க” என்று பணித்தனன். 羽

அவலும் சரவணப் பொய்கை அடைந்து அவர் வருகை நோக்கியிருந்தான்் ; நக்கீரனுர் வழக்கம்போல் வந்து நீராடிக் கீரை ஏறி அஞ்செழுக் தோதிக் கொண்டே ஆலமரத்தடியில் அமர்ந்தார்; அக்கிலையில் அண்டாபரணன் அவர் காணுமாறு, ஆலமரத்து இலை யொன்றைக் கிள்ளி இட்டான் ; அது கரையிலொருபாதியும், நீரிலொருபாதியு மாக விழுந்தது; கரையில் விழுந்த ஒரு கூறு குருகாயும், நீரிற்புடிந்த மற்றொருகூறு கயலாயும் வடிவுற்று ஒன்றை யான்று ஈர்க்கத் தொடங்கின; அதனேக் கண்டார் நக்கீசர்; அவ்விரு உயிர்கள் மீதும் இரக்கம் கொண்டு அவற்றைப்பற்றி சகத்தினுற் பிரித்து விட்டார்; அவை யிாண்டும் அங்கிலையிலேயே வாய்கிறந்து குருதி கக்கி உயிர் துறந்தன. உடனே, அண்டாபரணன் நக்கீசர் முன் தோன்றி, முருகனுறையும் குன்றில் கொலை புரிந்தனே ” எனக்குற்றம் சாட்டி அவரைக் கொண்டுபோய், மலைக்குகை ஒன்றினுள் அடைத்திட்டான்; நக்கீரனர், இவ் விடர்ப்பாடு முருகனைப் பாடாக் குறையால் வந்தது என்று அறிந்து, ' உலகம் ' என்று தொடங்கி, ' கிழவன்' என முடித்துத் திருமுருகாற்றுப்படை பாடிப் பாவினர்; முருகன் அவர் கனவு கிலேயிற்ருேன்றி, நம்மைக் கிழவன் என்று பாடின, நாம் கிழவனுய் வரப் பல்லாண்டு ஆகும்” என்று கூறிச் சென்ருன் ; உடனே ஈக்ாேர்,

' குன்றம் எறிந்தாய்; குறைகடலில் குர்தடிக்காய்;.

புன்கலேய பூதப் பொருபடையாய்-என்றும்