பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுருகாற்றுப்படை 85

விரும்பும் ,ே அவன் யாண்டாண்டு உறைவன்? என வினவுதியாயின்,'அவனுறையும் இடங்களைக் கூறுகின்றேன். கேள் ' எனத்தொடங்கி, அவன் திருப்பாங்குன்றிலே விரும்பி உறைதலும் உண்டு” என்று முடிக்கின்றார், .

இதில், வரையுறையும் குரர மகளிர்தம் விளையாட்டு வகைகளும், பேய்களின் துணங்கைக் கூத்தின் இயல்பும் விளங்க உரைக்கப்பட்டுள்ளன. மதுரைக்கு மேற்கே இருப்பது திருப்பாங்குன்றம் என்றும், பகைத்துப் போரிடுவார் எவரையும் பெருமையால் போர்கிகழ்ச்சி யினைக் கண்டறியா வாயில்களையும், திருமகள் செல்வச் செருக்கோடு வீற்றிருக்கும் குற்றம் தீர்ந்த அங்காடி களேயும், மாடங்கள் மலிந்த மாபெருங் தெருக்களேயும் உடையது கூடல் என மதுரையின் வெற்றியும் செல்வமும் விளங்கப் பாடப்பட்டுள்ளன:

'பொருநர்க் தேய்த்த போர் அருவாயில்

திருவீற் றிருந்த தீது தீர் நியமத்து மாடம்மலி மறுகின் சுடடல்.’ (சுக - எக) நன்கு சேறுபட்ட அகன்ற வயல்களில் வளர்ந்து மலர்ந்த தாமரை மலர்களில் இராக்காலத்தே துயில் மேற் கொண்டு, விடியற்காலத்தில் தேன் மணக்கும் நெய்தல் மலர்களில் ஊதிப்படிந்து தேன் உண்டு, ஞாயிறு தோன்றிய உடனே, சுனேகளிலே மலர்ந்து மணங்கமழும், நீலக்கண்கள் போன்ற மலர்களைச் சூழ்ந்து ஒலித்துப் பறக்கும் வண்டுகளின் ஆரவாரம் நிறைந்த திருப்பாங் குன்று என்று கூறும் விடியற்கால இயல்பு வியந்து பாராட்டத்தக்கதாம்: - ... -

'இருஞ்சேற்று அகல்வயல் விரிந்து வாயவிழ்ந்த

முள்தாள் தாமரைத் துஞ்சி, வைகறைக் கள்கமழ் செய்தல் ஊதி, எல்படக் கண்போல் மலர்ந்த காமர் சு?னமலர் அம்சிறை வண்டின் அரிக்கணம் ஒவிக்கும் - குன்று.” - (ವ್ಹ೬ - ೯)