பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுருகாற்றுப்படை 89

கூறி முருகன் அருட்டிரு விளையாடல் ஒன்றை அழகாக எடுத்துக் கூறியுள்ளார். - -

இதில், முப்பத்து மூவரும், பதினெண் கணங்களும் கலந்திருந்த காட்சியினை மீன்பூத்தன்ன தோன்றலர்' என்ற தொடராலும், அவர்கள் செல்லும் செலவின் விரைவினை, வளிகிளர்ந்தன்ன செலவினர் ” என்ற கொடாலும், அவர்கள் தம் போற்றலே வளியிடைத் தியெழுந்தன்ன கிறலினர் ” என்ற தொடராலும், அச்சங் தரும் அவர் கம் பெருங்குரலினே ப்ேபட உரும் இடித் தன்ன குரலினர்’ என்ற தொடராலும் உவமை எயம் தோன்ற உணர்த்திய திறம் உள்ளுதொறும் உவகை பயபபதாம.

மகளிரைப் பற்றிக் கூறுங்கால், நோயின்றி இயன்ற யாக்கையர், அவிர் தளிர் புசையும் மேனியர் ” எனக்கூறும் தொடர்களால், பண்டைக்காலத் தமிழகத்தில் வாழ்ந்த மகளிர்தம் உடல் வனப்பும், வலிமையும் விளங்கித் தோன்று வதும் கானக.

மரவுரி ஆடை, வலம்புரிச் சங்கு போலும் வெண்கரை, அழுக்கற விளங்கும் வடிவம், மான் தோல் அசையும் மார்பு, உள்ளொளிப் பெருக்கினை உணர்த்தவல்ல மார்பு எலும்புகள் தோன்றுமாறு ஊண் ஒழித்து மெலிந்த யாக்கை ஆகியவற்றை உடைய முனிவர்கள், பல நாள் உணவின்றி மேற்கொண்ட கோன்பும், இகலும் மாறுபாடும் - இல்லா மனமும், பல கற்றோலும் அறியப்படா அறிவும், முற்றும் கற்றுத்துறைபோய்க் கற்ருேர் பலர்க்கும் தலை வராம் தகுதியும், காமமும் கடுஞ்சினமும் கடிக்க காட்சியும் இடும்பை என எதையும் கொள்ளாத் திண்மையும், எப் பொருள்பாலும் வெறுப்பினைக் கொள்ளாத் தெளிவும் உடையராவர் எனக்கூறும் முனிவர்களின் இயல்புகள், எல்லோராலும் அறிந்து மேற்கொள்ள வேண்டிய பண்பு களாம். -