பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்புடைமை 29.

வரலாற்றினே அறியும் வகைகாணமாட்டாமல் திகைத்து கின்ற நம்மவர்க்கு, அதை அறிவிக்கும் வழிகாட்டியாய் கின்று பெருந்துணை புரிந்தவர் பரணராவர் ; தமிழகத் தின் முதற்பெரும் வரலாற்று நாற் பேராசிரியர் (First Historian) பாணரே. பரணர் பாடிய பாக்கள், பிற பெரும்புலவர் பாடிய பாக்களின் எண்ணிக்கையை நோக்க, மிகமிகக் குறைவே; அவர் பாடியனவாக நமக்குக் கிடைத் அள்ள பாடல்கள் எண்பத்தைந்து ; இவ்வெண்பத்தைக் சிலும் வரலாறு உரைப்பதற்கென்றே அமைந்த புறப் பாடல்கள் இருபத்துமூன்று மட்டுமே ; இவற்றுள்ளும், சோன் செங்குட்டுவன் ஒருவனே ப்பற்றி மட்டுமே பத்துப் பாடல்களுக்குமேல் உள்ளன. எஞ்சிய சிலவற்றுள், வா லாற்றுச் சிறப்பு வாய்க்காது, பொதுவாக அக்கால அரசர் இயல்பினே விளக்கும், மகட்பாற் காஞ்சித்துறை தழுவிய பாடல்கள் நான்கு. ஆக இவையெல்லாம் நீங்க, வரலாற்று விளக்கம் அளிக்கும் பாடல்கள் எட்டே ; இவை அளிக்கும் வரலாற்றுக் குறிப்புக்களும் அவ்வளவு மிகுதியன்று; இவை எட்டானும் அறியக்கூடியன அறுவர் வரலாறு மட்டுமே ; ஆனால், அவரால் அறிந்து உரைக்கப்பட்டோர் ஐம்பதின் மர்க்கும் மேலாம்; இவருள் மேற்கூறிய எழுவர் நீங்க, ஏனே யோர் வரலாறெல்லாம், அவர் பாடிய அகத்துறைப் பாடல் களினலேயே அறியப்படும். அவர் பாடிய அகத்துறைப் பொருள் தழுவிய பாடல்கள் அறுபத்திரண்டு. இவற்றுள் ஐம்பதுக்கு மேற்பட்ட பாடல்கள் புறத்திணைத் தலைவர் களின் வரலாறுகளை விளக்குவனவாம்.

அகத்தறைப் பாடல்கள் யாருடைய வரலாற்றினையும் சிறப்பாகக் குறிப்பதின்றிப், பொதுவாக அக்கால ஆண், பெண் கூடிவாழ்க்க வாழ்க்கை வகைகளை வகுத்துரைப் பனவாம். அகத்திணைத் தலைவர்களே அல்லாமல், புறத் திணைத் தலைவர் பெயரைக் குறிப்பிடல் கூடாது :

மக்கள் நுதலிய அகன் ஐந்திணையும், சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெரு.அர்.”