பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாணாற் பாடப்பட்டவர்கள் 6].

நிலைக்கொராஅ இலக்கம் போன்றன : மாவே, எறிபதத்தான்் இடங்காட்டக் கறுழ் பொருத செவ்வாயான் எருத்து வவ்விய புலிபோன்றன ; களிறு, கதவு எறியாச் சிவந்து உாாஅய் நுதி மழுங்கிய வெண்கோட்டான் உயிருண்னும் கூற்றுப் போன்றன : நீயே, அலங்குளைப் பரீஇ இவுளிப் பொலந்தேர் மிசைப் பொலிவு தோன்றி. மாக்கடல் கிவந்தெழுதரும் செஞ்ஞாயிற்றுக் கவினை மாதோ ! அனையை யாகன் மாறே, - தாயில் தாவாக் குழவி போல - ஒவாது கூஉம் நின் உடற்றியோர் நாடே.’ (புறம்: ச.).

- இளஞ்சேட் சென்னியின் வீரமும் பெருமையும் இவ் வாறு விளங்க உரைக்கப்பட்டுள்ளதே அன்றி, அவன் பகை வர் யார் என்பது தெளிவாக உணர்த்தப்படவில்லை. பெருங்குன்றார் கிழார் என்ற புலவரும் இவனைப் பாராட்டி யுளளாா.

(2) சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளி

சங்கப்புலவர்கள் அறிவிக்கும் சோழ அரசர்கள் பல் ராவர் ; ஆனால், அவர்களுள் ஒருவருக்கொருவர் என்ன உறவுடைய்வர் என்பதை அவர் பாக்களால் அறிதல் இப லாது ; மேலும் சோழநாடு முழுதும் ஒராட்சிக்குட் பட்டே இருந்தது என்று கூறல் இயலாது; ஒரேகாலத்தில் சோழநாட்டின் பல பகுதிகளிலும் பல சோழ அரசர்கள் ஆண்டுவந்துள்ளனர்; ஆதலின், வேற்பஃறடக்கைப் பெரு விறற்கிள்ளியின் தந்தை பார்சி இவனுக்குப் பின் அரசு கட்டில் ஏறினேன் யார் என்பதை அறிதல் இயலாது.

இவனைப் பாராட்டிய புலவர்களும் பலரல்லர்; பாணர், கழாத்தலையார் இருவ்ர்ே பாடியுள்ளனர்; அவர்களும்,