பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரணராற் பாடப்பட்டவர்கள் 63

சேரலாதன். ஆனால், இவ்விருவரும் வேறு வேறு அல்லர்; ஒருவரே என்பது அறிஞர்கள் முடிவாம். இருவர்க்கும் நெடுஞ்சேரலாதன் என்ற பெயர் ஒற்றுமை உளது ; இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன், குடவர்கோமான் நெடுஞ் சேரலாதன் எனவும், குடக்கோ நெடுஞ்சேரலாதன்' எனவும் பதிற்றுப்பத்துப் பதிகங்களில் அழைக்கப் பெறு கின்றன் ; இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் வெற்றிச் சிறப்பு எனப்பட்ட இமயத்தில் வில்பொறித்த செய்கை யைக் குடக்கோ நெடுஞ்சேரலாதனப் பாடிய பாணரும், தம் பாட்டொன்றில் குறிப்பிட்டுள்ளார்; பாணர், இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன் காலத்தில் வாழ்ந்தவராவர்; ஆகவே, அவர் குறிப்பிடும் இமயத்தில் விற்பொறித்த செயல், அவரால் பாராட்டப்பெற்ற இக்குடக்கோ நெடுஞ் சேரலாதனுக்கு உரியதாகக் கொள்ளுதலும் கூடும். கூறிய

f கு ぐ。 ளுதலு இக்காரணங்களால், இவ்விரு சோலாதர்களும் வேறுவேறு அல்லர்; ஒருவரே என்பது உறுதியாதல் காண்க

அவ்வாருயின், சோழன் வேற்பஃறடக்கைப் பெரு விறற்கிள்ளியோடு போரிட்டு உயிரிழந்த நெடுஞ்சோலா தன், சோன் செங்குட்டுவன் கங்கையாகிய இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனே ஆவன் ; இவன் தங்கை, பெருஞ் சோற்று தியன் சோலாதன் ; தாய், வெளியன் வேண்மான் மகள் கல்லினி, இவனுக்கு மனேவியர் இருவர் ; ஒருத்தி, சோழன் மனக்கிள்ளியின் மகள் நற்சோனை ; மற் றொருத்தி, வேளாவிக்கோமான் பதுமன் என்பவன் மகள். முன்னவள் வழியாகச் செங்குட்டுவன், இளங்கோ என்ற இருமக்களையும், பின்னவள் வழியாகக் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்ற இருமக்களையும் பெற்றிருந்தான்்; ஆரியரை வென்முன் ; அவர்கள் தலையில் நெய் வார்த்துக் கைகளைப் பின்கட்டா கக் கட்டி, அரிய பல பொருள்களைத் தண்டமாகப் பெற் ருன்; அவர்கள் இமய மலையில், தன் குலக் கொடியாகிய வில்லைப் பொறித்து மீண்டான் ; கடம்பமரத்தைத் தம் குலமரமாகக்கொண்டு கடலிடையே வாழ்ந்துவந்த பகைவர்