பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 ட ர ன ர்

எல்லாம் வாடவும், அருவிகள் நீர்அற்று அழகிழப்பு வும் பெரும்பஞ்சம் தோன்றியகாலத்தில், சோாட்டுப் பேராறு, கரைகளே அழித்து ஒடி, பொன்னேர் பூட்டும் உழவர் உள்ளமெல்லாம் பூரிக்கச்செய்யுமாறு, பெருமழை பெய்து பெருவெள்ளம் வரச்செய்யும் வானத்தைப் போன்ற கொடைக்குணமுடையான் குட்டுவன்.

செங்குட்டுவன், பொருள்பெறு தசையால், தன்னைப் பாடி யடைந்த புலவர் பெருமக்களே விரும்பி ஏற்று, அவர ஆச உண்ணுமாறு அருகிருந்து உண்பிப்பன் ; ஆடல் பாடல்களால் தன் அகம் மகிழச்செய்யும் பாணர், கூ க்தர் முதலியோர்க்கு பொற்கலன் பல அளிப்பன் ; கையிற் ருங்கிய யாழின் எழுந்த இசையோடு இயைய இன்குரல் எழுப்பிப் பர்டும் விறலியர்க்குப்பிடியானேகள் பல அளித்து. அன்பு காட்டுவன்; வெற்றிமேல் வெற்றியே வேட்கை யாகக்கொண்டு, பகைவேந்தர் உள்ளம் பதைபதைக்கு மாறு, அவர் நாட்டிற் புகுந்து போரிட்டுப் பொருள்பல. கவர்ந்துவரும் ஆண்மை நிறைந்த ஆற்றல்மறவர்க்குக் கொல்லும் பானேகள் பல கொடுத்து மகிழ்வன் ; கையில் கோலேந்தி, ஊர் மன்றத்தும், கெருக்களிலும் வேந்தன் விழுப்புகழ் விளங்கப் பாடும் பாண்ர்க்குக் குதிரைகள் பல் பரிசளித்துப் பாராட்டுவன்; இவற்ருல் எல்லாம் செங்குட்டுவன் புகழ் ஓங்குவது கண்டு அவன் பகைவர் பொருமை கொள்வர் என்னும், அவன் புகழ் அவர் உள்ளத்தே அடங்கி மறைந்துபோகா மாண்புடைய தாகவே, அவர்கள்-தங்களையும் மறந்து அவன் புகழ் பாராட்டுவர் : . .

窓。

ஆர்கலி வானம் தளிசொரிக் தாங்கு உதவர் ஆ ஓம்பாது உண்டு, -

கைவர் ஆா நன்கலம் சிதறி, ஆடுசிறை அற்க்க நரம்புசேர் இன்குரல் பாடு விறலியர் பல்பிடி பெறுக ; தய்வீ வரகை நுண்கொடி உழிஞை