பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எறிச்சிலுரர் மாடலன் மதுரைக் குமரனர் 99.

இவ்வாறு இருபெரும் படைவீரர்களின் வண்மையினே விளங்கப்பாடிய புலவர் மாடலன் மதுரைக்குமரனர் தமிழ கத்தே மற்றொரு விரனும், சிறந்த கொடையாளய்ை விளங்குவதைக் கண்டார். அவன் கொங்குநாட்டில் ஈர்ந்துார் என்ற ஊரில் வாழ்ந்திருந்தான்் ; பெருஞ்செல்வ னல்லன்; ஆயினும், தன்பால் வந்து இரந்தார்க்கு இல்லை என்னுது ஈயும் சிறப்புடையவன்; இரப்பார்க்கு அளிக்கத் தன்பால் பொருள் இல்லையாயின், உடனே பகைவர் நாடு சென்று போர்செய்து பெரும்பொருள் கொணர்ந்து கொடுக்கும் குணமுடையவன்; இவன் பெருமையுணர்ந்த புலவர், அவன்பால் சென்று அவனைப் பாராட்டி, அவன் அளித்த பரிசில் பெற்று மகிழ்ந்தார். உடனே அவன்பால் பொருள் பெற்ற பாணன் ஒருவன், வறுமையால் வாடிப் பொருள் அளிப்பாரைத் தேடி எதிர்வரும் பாணன் ஒருவனே நோக்கி, "பாண ! நம்போலும் பாணர்தம் பசி போக்கிப் பாண்பசிப் பகைஞன் என்ற பெயர்கொண்டான் ஒருவன் சர்ந்தையில் உள்ளான்; அவன் வருவார்க்கு வாரி வாரி வழங்கத்தக்க வளமுடையனல்லன்; ஆயினும், வரு வார்க்கு இல்லெனக் கூறி வறிதே அனுப்பும் சிறுமையும் உடையனல்லன் நின் வறுமை கெடவேண்டுமாயின், எம்மோடு வருக, யாம் சென்று அவன்பால் இரந்துகிற் போமாயின், அவன் தன்னுர்க் கொல்லன்பால் சென்று, அவனுக்கு வறுமையால் உண்ணுது வாடிய நம் வயிற் றினைக் காட்டி, இவர் பகிதிசப் பொருள் கொண்டுவருதல் வேண்டும் . ஆதலின் அதற்குவேண்டும் வேல் வடித்துக் கொடுக்க வேண்டுகின்றேன் என்று இரந்துகிற்பன்,' என்று கூறுவதாகப் பாடிப் பாராட்டினர் : * . .

"கிரப்பாது கொடுக்கும் செல்வமும் இலனே; இல்லென மறுக்கும் சிறுமையும் இலனே;

கருங்கைக் கொல்லண் இரக்கும் திருந்திலை நெடுவேல் வடித்திசின் என்வே."(புறம்: க.அo)