பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ. அஞ்சில் அஞ்சியார்

அஞ்சில் என்பதோர் ஊர்; அவ்வூரிற் பிறக்தவாத, லின், இவர் அஞ்சில் அஞ்சியார் என அழைக்கப்பெற்ருர். தமிழகத்தைப் பேரரசர் மூவரோடு ஒப்ப ஆண்டு, புலன் ரைப்போற்றித் தமிழ் வளர்த்த அரசு இனங்களுள் அதியர் என்பாரும் ஒருவராவர். அதியர் என்பார், தகடுரைத் தலைநகராகக்கோண்ட சிறுகாட்டை ஆண்டிருந்த குறுகிலத் தலைவராவர். இவர் குடியில் வந்து, ஒளவையாருக்கு அரிய கெல்லிக்கனி அளித்த அதியமான், அஞ்சி எனவும் அழைன் கப்பெறுவனதலின், அஞ்சி என்ற சொல், அதியரைக் குறிக்க வழங்கும் மற்றொரு சொல்லாம் என்பது பெறப் படும். ஆகவே, இவ் அஞ்சியார் தமிழ் வளரத் துணை புரிந்த ஒரு குடியிலே வந்தவர் , தமிழறிந்து தமிழை வளர்த்தவர் என்ற பெருமை உடையவராவர். அஞ்சி அத்தை மகள் நாகையார் என்ற பெயருடைய பெண்பாம் புலவரொருவர் உளர்; அவர், இப்புலவர் அஞ்சில் அஞ்சி யாரின் அத்தை மகளோ, அன்றி, ஒளவைக்குக் கணி அளித்த அஞ்சியின் அத்தை மகளோ அறிகிலோம் எனி னும், இருவரும் ஒருகுடியில் வந்தவராவர் என்பது உறுதி. அஞ்சியார் பாடிய பாட்டு ஒன்று கற்றினேயில் மருதத் திணையை விளக்கி கிற்கிறது. . . .

பரத்தையிற் பிரிந்த தலைமகன் விடுக்க வந்து வாயில் வேண்டி கிற்கும் பாண்மகன் கேட்குமாறு, 'தலேவன் உறவுகொள்ளும் பெண்தன்மை யறியாப் பேதைப்பகு வத்துப் பரத்தை, ஊசல் ஆடாது அழுது நிற்கின்ருள். அவளே ஆற்றுவித்து மீட்டும் ஆடச் செய்வார் ஆங்கு எவரும் இலர்; அதனல், அவள் அழுது ஊடினுள் அவள் ஊடினமையால் இவன் இங்கு வந்துளான்,” எனத் தோழி கூறும் துறையமைந்தது அச் செய்யுள், * . .

இந்த ஒரே செய்யுளில், பேரூர்க்கு அழகு, ஆடல் முதலாம் விழாக்கள் குறைவின்றி கிகழ்வதாம் என ஊர் அழகினேயும், பேரூரிற்பிறந்து, மக்கள் அணிந்து அழுக்